பாத்ரூமில் நிர்வாணமாக குளிக்க விரும்பாத ஆண்கள் இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, அல்லது ஜட்டியுடன் குளிக்கலாம். ஆனால் ஜட்டியுடன் குளிப்பதாக இருந்தால், குளிப்பதற்கு என்றே பிரத்தியேகமாக வேறு ஜட்டியை பயன்படுத்துவது உகந்தது.
அதற்குக் காரணம், நீங்கள் அன்றாடம் அணியும் ஜட்டியை அணிந்து கொண்டு குளிக்கும் போது, உடலுக்கு போடும் சோப்பு ஜட்டியின் துணியை சீக்கிரம் பழுதடையச் செய்யலாம். ஜட்டியின் நிறம் வெளிறிப் போகலாம். ஜட்டியின் துணி தடிமனானது போல நீங்கள் உணரலாம். ஜட்டியில் சீக்கிரம் ஓட்டைகள் ஏற்படலாம்.
ஆண்கள் விரும்பினால், அன்றாடம் அணியும் ஜட்டிகளை புதிய ஜட்டிகளை வாங்கி மாற்றும் போது, பழைய ஜட்டிகளை குளிக்கும் போது அணிந்திருக்க பயன்படுத்தலாம்.




Comments
Post a Comment