Dorothy(2026) திரைப்படம் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவது வெளியாகவுள்ள நிலையில் நேற்றைய தினம் மலேசிய தணிக்கை குழு இந்தப் படத்தில் LGBTQ சார்ந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது வானவில் வாழ்க்கை முறையை சமூகத்தில் திணிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி தடை செய்துள்ளதாக செய்திகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக மத்திய கிழக்கு நாடுகளிலும் தடை செய்துள்ளதாக அறியக் கிடைத்தது.
மலேசியா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இஸ்லாமிய நாடுகள், அவை இஸ்லாமிய மதம் சார்ந்த கட்டுப்பாடுகள் காரணமாகவே பொதுவெளியில் இந்தப்படத்தை தடை செய்துள்ளன. ஆனால் அங்கு வசிக்கும் பலர் இந்த திரைப்படம் OTT யில் வெளிவரும் போது குடும்பத்துடன் பார்ப்பதற்கு தயாராகவே உள்ளனர்.
(Update) இது தற்போது திருநங்கைகளின் வாழ்க்கை சம்பந்தமான திரைப்படமாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், திருநங்கைகள் இஸ்லாமில் தடை செய்யப்படவில்லை, அவர்கள் சம்பந்தப்பட்ட குறிப்புகள் கூட திருக்குர்ஆனில் இல்லை. அவ்வாறான நிலையில் மலேசிய திரைப்பட தணிக்கைக் குழு ஏன் இந்த திரைப்படத்தை தடை செய்தது?
ஆனால் நம்மூரில் இருக்கும் பலர் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று பார்ப்பதை தவிர்க்குமாறு கதற ஆரம்பித்துள்ளனர். இத்திரைப்படத்தில் கதாநாயகர்களான Rishikanth மற்றும் Sananth, ஆரம்பத்தில் கிராமத்து சூழலில் வாழும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்பட்டிருந்தாலும், வேண்டுமென்று பரப்பப்படும் சில Spoilers களில், இவர்கள் தன்னினச்சேர்க்கையாளர்களாக(Gay) நடித்திருப்பதாக கூறுகின்றனர்.
(Update) ஆனால் இது Gay நண்பர்கள் சம்பந்தமான திரைக்களத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம் அல்ல என்று தற்போது நிரூபனமாகி உள்ளது. திருநங்கைகளின் காதல் வாழ்க்கை தொடர்பாகவும் திருநங்கைகள் தொடர்பாகவும் ஏற்கனவே Super Deluxe(2019), Thittam Irandu(2021) போன்ற படங்கள் வெளியாகி உள்ள நிலையில், Dorothy(2026) திரைப்படத்திற்கு மாத்திரம் எதிர்ப்புகள் கிளம்புவது ஏன்? வன்முறை நிறந்த சூழலில், அடாவடியாக வாழ்ந்த ஒரு ஆண், தாடி/மீசை வைத்திருந்த ஒரு ஆண் பின்னர் ஒரு பெண்ணாக மாற விரும்பியமையை காண்பித்ததாலா?
Dorothy திரைபப்டத்தில் Rishikanth மற்றும் Sananth கத்தி சண்டை போடும் காட்சி இடம்பெற்றுள்ளதா? - Gay Scene
அது மாத்திரமல்லாது, அதில் ஒருவர் ஊர் உலகத்திற்காக.. Dorothy யாக நடித்துள்ள Keerthy Suresh யை திருமணம் செய்ததால் ஏற்பட்ட சாதிப் பிரச்சனை சார்ந்த கதைக்களமாக இந்த திரைப்படம் உள்ளதாக கூறுகின்றனர். இது உண்மையா?
Update: Keerthy Suresh(Dorothy), Sananth(Subbu) வுடன் நெருக்கமாக இருப்பதையும், முத்தம் கொடுப்பதையும் அவதானித்து, இருவருக்குள்ளும் ஏதோ கள்ளத்தொடர்பு ஓடுவதாக நினைத்து தான் Dorothy யை சுப்புவின் அண்ணன், அவளது கணவன் கொலை செய்கிறானா?
ஒரு ஆணோ, பெண்ணோ தன்னினச்சேர்க்கையாளராக மாறுவது இயற்கையாக நிகழும் நிகழ்வாகும். ஒரு படம் பார்த்தால் நீங்களும் தன்னினச்சேர்க்கையாளராக மாறிவிடுவீர்கள் என்பது மிகவும் கீழ்தரமான சிந்தனையாகும்.
Rishikanth ஹீரோவாக நடித்த Modha Rathri(மொத ராத்திரி) திரைப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், Rishikanth இவ்வாறான படம் நடித்திருப்பது அவரின் சினிமா வாழ்க்கையை பாதிக்கும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால் கொடுத்த கதாப்பாத்திரத்தை திறம்பட நடிப்பது தான் ஒரு நடிகனுக்கு உண்மையில் அழகு.
நடிகர் Naslen(ஆண்) இன் First On Screen Kiss நடிகர் Amal Davis(ஆண்) உடன் தான் நடந்தது. அதுவும் ஒரு முஸ்லிம் ஆணாக இருந்து இன்னொரு ஆண்யை உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிட்டிருந்தார். அவர் இன்று பெரும் புகழுடன் இல்லையா?
ஒருவர் Dorothy திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை(Special Show) தான் பார்த்ததாகவும். இது Pro Trans, and Pro LGBTQ Movie என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பத்துக்கு அடுத்தது பதினொன்று என்றால் பத்துக்கு முதல்? ஒன்பது.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் படத்தில் ஒரு திருநங்கை "இன்னும் 10 வருஷத்தில நாங்க தான் நார்மல், இந்த ஊரு உங்கள தான் கேவலமா பார்க்கும்" என்று கூறும் வசம் இடம்பெற்றுள்ளதாக கூறுகிறார். அந்த வசனம் ஏன், எவ்வாறான் சந்தர்ப்பத்தில் பேசப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்மையும் சக மனிதர்களாக ஏற்றுக் கொள்ள இன்னும் 10 வருஷம் ஆகும் என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாக கூட அது இருக்கலாம்.
Update: திரைப்படத்தில் இடம்பெறும் வசனம், சந்தர்ப்பம் வேறு. இது திரிவுபடுத்தப்பட்டுள்ளது. "பத்து வருஷம் தான்.. இன்னும் பத்தே வருஷம் தான். எங்கள எங்களாவே இந்த உலகம் ஏத்துக்கும்." என்று தான் அந்த திருநங்கை, தன்னை அசிங்கமாக பார்த்த லாறி டிரைவரிடம் திரைப்படத்தில் சொல்வார்.
அவர் நடிகர் Rishikanth க்கு திரையில் நடைபெறும் முதல் முத்தக் காட்சி(First OnScreen Kissing Scene) இன்னொரு ஆண்(Sanath) கூட தான் என்றும் கிண்டலடித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கதையின் ஒரு கட்டத்தில் Sanath ஆணாக இருந்து பெண்ணாக மாறும் போது, அவரைக் கொலை செய்ய அவரது நண்பனான Rishikanth யையே அவரது குடும்பம் நியமிப்பதாக கூறுகிறார்.
Rishikanth அவரது நண்பனை இந்த நிலையில் இருந்து மீட்டு மீண்டும் நண்பனாக ஏற்றுக் கொள்ள போராடுவது போல காட்சிகள் நகர்கின்றன. ஆனால் இறுதியில், ஒரு திருநங்கையாகவே Sananth யை தனது நண்பனாக Rishikanth ஏற்றுக் கொள்ளும் போது, இன்னொரு நபர் அவன் உன்னை அவனது நண்பனாகவே பார்க்கவில்லை. அவன் உன்னை காதலிக்கிறான் என்றும், நீ அவனை திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். அதனை Rishikanth ஏற்றாரா? திருநங்கையாகி இருக்கும் அவனது நண்பனை அவன் திருமணம் செய்வானா? முடிவு என்னவானது என்பது தான் மீதிக்கதை.
(Update) நண்பர்கள் எப்படி காதலர்களாக முடியும் என்று முட்டுக் கொடுக்கும் பலர் தான், திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறிய தனுஷையும், நித்யா மேனனையும் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். ஆம்பளையும் பொம்பளையும் பண்ணினால் சரி, ஆனால் ஆம்பளையும் ஆம்பளையும் அல்லது ஆம்பளையும் திருநங்கையும்/திருநம்பி, அல்லது பொம்பளையும் பொம்பளையும் அல்லது பொம்பளையும் திருநங்கையும்/திருநம்பி,பண்ணினால் தவறா?
ஆரம்பத்தில் Keerthy Suresh ஒரு திருநங்கையாக நடித்துள்ளதாக கூறினர், இப்போது இப்படி ஒரு கதையை பரப்புகின்றனர். இதில் எது உண்மை என்பதை திரையரங்குக்குச் சென்று பார்த்தால் தான் புரியும்.
இது எதுவாக இருப்பினும், பலர் இந்த படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டாம் என்று கதறுவதற்குக் காரணம், அவர்கள் பார்த்தால் அவர்களுக்கு தன்னினச்சேர்க்கை(Gay, Bisexual, Lesbian), திருநங்கை/திருநம்பி(Transgender), LGBTQ சார்ந்த விழிப்புணர்பு கிடைத்து விடும், உண்மைகள் பல விளங்கி விடும். போலி முகமூடி அணிந்து, இரட்டை வாழ்க்கை வாழும் பல ஆண்களின் நடிப்பு அம்பலமாகி விடும் என்பதனாலேயே இவர்கள் Family Audience யை ஒதுக்கி வைக்கப் பார்க்கிறார்களா?
"டோரதி" படத்தில் சுப்புவுக்கு கார்த்தி மேல காதல் இருந்ததா எந்த காட்சியும் இல்லை, எந்த சாட்சியும் இல்லை. அப்படி இருக்கையில் சுப்பு எதுக்காக கார்த்தியோட காதலை எந்த மறுப்பும் இல்லாமல் ஏத்துக்கிட்டான்? யார் யாருக்கோ வாய் போடுறதுக்கு தன் நண்பனுக்கே வாய் போட்டு வாழ்ந்திடலாம்னு யோசிச்சிருக்கலாம். யார் யாருக்கோ குனியிறதுக்கு தன் நண்பனுக்கு மட்டுமே குனிந்திடலாம் என்று யோசிச்சிருக்கலாம். கார்த்தி மட்டும் சுப்புவுக்காக வரலனா, அவன் டோரத்தியா ஏனைய திருநங்கைகளுடன் பிச்சையெடுக்கவும், விபச்சாரத்தில் ஈடுபடவும் சென்றிருப்பான்.
Spoiler: நடிகர் Rishikanth மற்றும் நடிகர் Sananth முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சியுடன் திரைப்படம் முடிவடைகிறதாம். உங்களுக்கு இந்த சீனால பொச்செரிச்சல் வந்தால், நல்லா எரியட்டும்.
இந்தப் படத்திற்கு Dorothy என பெயர் வைக்க காரணம் என்ன?
Are you a friend of Dorothy? ஓரினச்சேர்க்கை தடைசெய்யப்பட்ட ஒன்றாக மேற்கத்தையே நாடுகளில் இருந்த காலத்தில் "குறியீட்டு மொழியில்"(Code Word) ஒரு Gay ஆண் இன்னொரு Gay ஆண்யை அடையாளம் காண, நீங்கள் டோரதியின் நண்பரா? என்று கேட்பார்களாம்.
மேற்கத்திய நாடுகளில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமாகவும், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் இருந்த காலத்தில்(குறிப்பாக 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்), தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியாத ஆண்கள், மற்றொருவர் ஓரினச்சேர்க்கையாளரா என்பதைத் தெரிந்துகொள்ள "Are you a friend of Dorothy?" என்று ரகசியமாகக் கேட்பார்கள்.
தி விசார்ட் ஆஃப் ஓஸ்(The Wizard of Oz), 1939 இல் வெளியான இந்தத் திரைப்படத்தில் "டோரதி" என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜூடி கார்லண்ட்(Judy Garland). இவர் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தினரால்(LGBTQ+) ஒரு பெரும் அடையாளமாக(Gay Icon) கொண்டாடப்பட்டார். அந்தப் படத்தில் டோரதி, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட அல்லது வித்தியாசமான குணங்களைக் கொண்டவர்களுடன்(Accepting of those who are different) எளிதில் நட்பாகப் பழகுவார். இது ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களுக்குள் உணர்ந்த பிணைப்பைக் குறிப்பதாக அமைந்தது.
நவீன காலத்தில் ஓரினச்சேர்க்கைக்கான தடைகளும் சமூகப் பார்வைகளும் பல மேற்கத்திய நாடுகளில் நீங்கிவிட்டதால், இப்போது இந்த வார்த்தை ஒரு வரலாற்றுச் சொல்லாகவே பார்க்கப்படுகிறது. எனினும், LGBTQ+ வரலாற்றில் இது ஒரு மிக முக்கியமான குறியீடாகும்.
அமெரிக்க இராணுவ வரலாற்றில் "டோரதியைக் தேடுதல்"(Finding Dorothy) என்பது, அமெரிக்க கடற்படை(U.S. Navy) உளவுத்துறை வரலாற்றில் செய்த ஒரு மிகப்பெரிய மற்றும் வேடிக்கையான தவறாகும்.
1980களில் அமெரிக்க ராணுவத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள்(Gay personnel) பணியாற்றுவது சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், தங்களை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள முடியாத ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொள்ள "Friend of Dorothy" (டோரதியின் நண்பர்) என்ற குறியீட்டு வார்த்தையைப்(Code word) பயன்படுத்தினர்.
1980களின் தொடக்கத்தில், சிகாகோ பகுதியில் உள்ள கடற்படை தளங்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்று அமெரிக்க கடற்படை புலனாய்வு அமைப்பு(Naval Investigative Service - NIS) தீவிரமாக விசாரித்து வந்தது.அப்போது கடற்படை வீரர்கள் பலர் தங்களை "டோரதியின் நண்பர்கள்" என்று ரகசியமாக அழைப்பதை அதிகாரிகள் கவனித்தனர். ஆனால், உளவுத்துறை அதிகாரிகளுக்கு இந்த வார்த்தையின் உண்மையான வரலாற்றுப் பின்னணி தெரியவில்லை.
அவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால்:"டோரதி" என்ற பெயரில் ஒரு நிஜமான பெண்மணி இருக்கிறார். அவர்தான் அமெரிக்க ராணுவத்தில் உள்ள அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு முக்கியப் புள்ளியாக(Information Hub/Mastermind) செயல்படுகிறார். எப்படியாவது அந்த "டோரதி" என்ற பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டால், அவரிடமிருந்து கடற்படையில் இருக்கும் அனைத்து ஓரினச்சேர்க்கையாளர்களின் பெயர்களையும் வாங்கிவிடலாம் என்று தவறாகக் கணக்கு போட்டனர்
இந்தத் தவறான அனுமானத்தின் அடிப்படையில், அமெரிக்க கடற்படை பெரும் தொகையையும், பல அதிகாரிகளையும் பயன்படுத்தி அந்தப் பெண்ணைத் தேடும் பணியில் இறங்கியது. உளவுத்துறை அதிகாரிகள் சாதாரண உடைகளில் சிகாகோவில் உள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடும் விடுதிகளுக்குச்(Gay Bars) சென்று, "டோரதி என்ற பெண்ணைத் தெரியுமா? அவர் எங்கே இருக்கிறார்?" என்று ரகசியமாக விசாரிக்கத் தொடங்கினர்.
இறுதியில், அப்படி ஒரு பெண்ணே நிஜத்தில் இல்லை என்பதும், அது ஒரு கற்பனையான திரைப்படக் கதாபாத்திரத்தைக் குறிக்கும் குறியீட்டுச் சொல் என்பதும் தெரியவந்தது. இந்தத் தேடுதல் நடவடிக்கையால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் பெருமளவில் வீணடிக்கப்பட்டது மட்டுமே மிச்சம்
எனவே, இராணுவத் திட்டமிடல் அல்லது புலனாய்வில், சமூகக் கலாச்சாரம் மற்றும் குறியீட்டுச் சொற்களைப்(Cultural Literacy & Slang) புரிந்துகொள்ளாமல் உளவுத்துறை செயல்பட்டால், எவ்வளவு பெரிய தோல்வி ஏற்படும் என்பதற்கு, இந்த "Finding Dorothy" சம்பவம் ஒரு மிகச்சிறந்த வரலாற்று உதாரணமாகக் கூறப்படுகிறது
Keywords: LGBTQ Theme, LQBTQ Supporting, LGBTQ Propaganda, Movie Review, ஓரினச்சேர்க்கை, Homosexual, Dorothy Movie Gay Scene






Comments
Post a Comment