இளவயதில் திருமணம் செய்து கொண்டாலும் சரி, காலம் கடந்து 30 வயதின் பின்னர் திருமணம் செய்து கொண்டாலும் சரி ஏன் தம்பதியினர் அவசரப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது? காதல் திருமணங்கள் போல அல்லாது, பெரியவர்களால் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் கணவன் மனைவிக்கு இடையில் நல்ல புரிதல் ஏற்பட சில காலங்கள் தேவைப்படும்.
10 வருஷமாக காதலித்தவர்கள் கூட கல்யாணமாகி ஒரு வருடத்தில் பிரிந்து உள்ளனர். இதற்கு பல பிரபலமானவர்களின் வாழ்க்கையை உதாரணமாக காண்பிக்கலாம்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் திருமணமான நாள் முதலே பெரியளவில் பேச்சுவார்த்தை இல்லை, Communication என்பது சிறப்பாக இல்லை என்றால் நாளடைவில் அந்த உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்து விடும்.
சில பெரியங்கள், அவ்வாறான விரிசல்களை குழந்தையை வைத்து ஒட்ட வைக்கவே, அதாவது குழந்தைக்காக சேர்ந்து வாழுங்க என்று கட்டாயப்படுத்தவே கல்யாணமானவர்களை பார்த்து ஏதும் விஷேசம் இல்லையா? என்று நச்சரிக்கிறார்கள்.
ஆனால் இது இன்னும் எத்தனை காலத்திற்கு தாக்குப்பிடிக்கும் என்று யாராலும் உறுதியாக கூற முடியாது. அவ்வாறான நிலையில் குழந்தையை வைத்து கணவன் மனைவிக்கு இடையிலான உறவை காப்பாற்றுவதை தவிர்ப்பது தொடர்பில் சிந்திப்பதே சிறந்தது.
அதன் மூலம், ஒரு வேளை இருவரும் விவாகரத்து செய்து கொண்டால் கூட அங்கு ஒரு குழந்தை தனியாக விடப்படாது. ஆகவே திருமணமான ஆரம்பத்தில், புதுசா கார் வாங்க முன்னாடி Test Drive பண்ண ஓட்டிப் பார்ப்பது போல , இருவருக்கும் நல்ல புரிதல், ஆழமான காதல் ஏற்படும் வரை காண்டம் போட்டு உடலுறவு கொள்ளுங்கள். தேவையான அளவுக்கு காமப் பசியை தீர்த்துக் கொள்ளுங்கள். மனைவியை கர்ப்பமாக்கும் எண்ணத்தை தள்ளி வையுங்கள்.
விபச்சாரிகளுடன் உடலுறவு கொள்வதற்கும், காதலியுடன் திருட்டுத்தனமாக உடலுறவு கொள்வதற்கும் மாத்திரமல்ல, ஒரு குடும்பத்தை திட்டமிட்டு உருவாக்கவும் ஆண்களுக்கு ஆணுறை(காண்டம்) உதவும். ஆண்களால் அவர்களின் மனைவியுடனும் காண்டம் அணிந்து உடலுறவு கொள்ள முடியும்.
பெண்களை கண்ட கண்ட கர்ப்பத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள நிர்ப்பந்தித்து, அவர்களின் உடல் ஆரோக்கியத்தை சீரழிப்பதை விட ஆண்கள் ஆணுறை அணிவது எவ்வளவோ மேல்!
உங்கள் வாழ்க்கை முழுவதும் ஒரு வாழ்க்கை துணையாக வரப் போகிறவங்க இவங்க தான் என்பதை முடிவு செய்த பின்னர் காண்டம் போடாமல் உடலுறவு கொள்ள ஆரம்பியுங்கள். அப்பவும் குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பில் யோசியுங்கள்.
ஏன் என்றால் குழந்தை பெற்றால் மாத்திரம் போதாது, அதனை ஆரோக்கியமாக, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து வளர்க்க வேண்டும். அதற்கான வசதியை ஏற்படுத்தியவுடன் குழந்தை பெற்றுக் கொள்வது தான் சிறந்ததாக இருக்கும்.
Keywords: இளவயதில் திருமணம் செய்தவர்கள் ஏன் அவசரப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது? திருமணம் செய்தவுடன் ஏன் அவசரப்பட்டு குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது?

Comments
Post a Comment