Boxer Shorts யை ஜட்டி கம்பனிகள் என்ன தான் அந்தக் காலத்து பட்டாப்பட்டி ஜட்டி போல பயன்படுத்தக் கூடிய ஜட்டி எனவும், அது ஆண்களுக்கான காற்றோட்டமான ஜட்டி எனவும் விளம்பரப்படுத்தினாலும், அதனை ஆண்கள் ஆண்களுக்கான ஜட்டியாக அங்கீகரிக்காமைக்குக் காரணம் ஒன்றே ஒன்று தான்.
உடலுடன் ஒட்டியது போன்ற தளர்வான சிறிய ஷார்ட்ஸ்(Small Shorts) போல Boxer Shorts ஜட்டிகள் தோன்றினாலும் அவை ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான மறைவைக் கொடுத்தாலும், சுதந்திரமாக ஓடி, ஆடி வேலை செய்யும் போது தொடைகளுக்கு நடுவே அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருக்கும் ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் ஓரிடத்தில் நிலையாக வைத்து தாங்கிப் பிடிக்க அவை தவறுகின்றன.
ஆண்களின் அந்தரங்கப் பகுதிகளுக்குத் தேவையான சப்போர்ட்டை Boxer Shorts ஜட்டிகள் வழங்காமையினாலேயே சில ஆண்கள் அதனை அணியும் போது உள்ளே Briefs ஜட்டி அணிந்து அணிகிறார்கள்.



Comments
Post a Comment