வேற்றுமைகளை களைந்து, வெவ்வேறு குடும்ப சூழல்களில், குடும்ப பின்னனிகளில் பிறந்து வளர்ந்த ஆண்களை ஒரு கூரையின் கீழ், வயது வித்தியாசம் பார்க்காமல் பழகி, ஒன்றாக கூடி வாழும் வாழ்க்கை ஹாஸ்டல் வாழ்க்கை ஆகும்.
காலேஜ் சென்று கற்கும் கல்வியை விட ஹாஸ்டல் வாழ்க்கையில் ஆண்கள் கற்கும் வாழ்க்கை அனுபவங்களும், ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகளும் பிற்காலத்தில் மிகவும் உதவியாக இருக்கும்.
இங்கு உருவாகும் நட்பு பிணைப்புகள் மிகவும் வலிமையாக இருக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்பவர்களாக இருப்பர். துக்கம், சோகம், சந்தோஷங்களை பகிர்ந்து ஒருவருக்கு ஒருவர் துணையாக வாழக் கூடிய நிலையை ஹாஸ்டல் வாழ்க்கை உருவாக்கும்.
ஹாஸ்டல் வாழ்க்கையில் தேடிக் கொள்ளும் நண்பர்களுடன் Bromance உறவை ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்கு நெருங்க முடியும். அதாவது சாதாரண நட்புக்கு ஒரு படி மேலே, ஓரினக் காதலுக்கு ஒரு படி கீழே இருக்கும் வகையிலான மிகவும் அந்நியோன்யமான நட்பை உருவாக்கிக் கொள்ள முடியும். புரியிற மாதிரி சொல்லனும்னா, ஒட்டிப் பிறந்த சகோதர்கள் போல இரண்டு பேரும் அம்மணமாக, நெருக்கமாக படுத்தாலும் இருவருக்குள்ளும் எதுவும் நடக்காது.
ஆண்களிடம் இருக்கும் கூச்ச சுபாவங்கள் காணாமல் போகும் இடம் கூட ஹாஸ்டல்கள் தான். நண்பர்கள் முன்னிலையில் ஆடை மாற்றுவது, ஜட்டியுடன் ஹாஸ்டலில் நாளைக் கழிப்பது, நண்பர்களுடன் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் முதுக்கும் சோப் போட்டு குளிப்பது, ஒன்றாக ஒரே கட்டிலில் தூங்குவது, நண்பர்களுடன் ஜட்டியுடன் தூங்குவது, நண்பர்களுடன் சேர்ந்து பிட்டு படம் பார்ப்பது. ஆசைக்கு ஒருவாட்டி சரக்கடிக்க பழகுவது, புகைப்பிடிக்கப் பழகுவது. பை ஓட்ட கற்றுக் கொள்வது, Dress Sense யை Improve பண்ணுவது, Grooming Skills யை வளர்த்துக் கொள்வது, புது விஷயங்களை பழகுவது, அல்லது உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வது என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.





Comments
Post a Comment