ஒரு ஆண்யை முழு ஆம்பளையா மாற்றுவதற்கு அவர்கள் அவசியம் ஆரோக்கியமான உடல் எடையைப் பேண வேண்டும். அவர்களின் உயரத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உடல் எடையை பேணாவிட்டால்(BMI) அவர்களின் உடலில் ஆண்களின் முதன்மையான பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன்(Testosterone) உற்பத்தி பாதிப்படையும். அதன் காரணமாக அவர்களின் ஆண்மை மிக்க தோற்றம் மறைந்து, மெதுவாக அவர்களில் பெண்மை வெளிப்படும். என்னங்க சொல்லுறீங்க?
ஆண்களின் உடலில் உள்ள அதிகப்படியான உடல் எடை(கொழுப்பு), ஆண்களுக்குரிய பாலியல் ஹார்மோனைப் பெண்களுக்குரிய பாலியல் ஹார்மோனாக மாற்றும் தன்மையைக் கொண்டுள்ளது.
நமது உடலில் உள்ள கொழுப்புச் செல்கள்(Adipose tissue), குறிப்பாக அடிவயிற்றில் தேங்கும் கொழுப்பு(Belly fat), "அரோமடேஸ்" என்ற ஒரு சிறப்பு என்சைமை(Enzyme) சுரக்கின்றன.
இந்த அரோமடேஸ் என்சைம், ஆண்களின் முதன்மையான பாலியல் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனை(Testosterone), பெண்களின் பாலியல் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனாக(Estrogen - Estradiol) மாற்றுகிறது.
உடலில் கொழுப்பு அதிகரிக்க அதிகரிக்க, அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் ஈஸ்ட்ரோஜனாக மாறுகிறது. இதனால் ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து, ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் குறையும் போது உடலில் மேலும் கொழுப்பு சேர்ந்து, எடை இன்னும் அதிகரிக்கும்.
இதனால் ஆண்களுக்கு மார்பகப் பகுதி பெரிதாவது(Gynecomastia) மற்றும் இடுப்புப் பகுதியில் சதை போடுவது, பாலியல் ஆர்வம் குறைதல்(Loss of libido) மற்றும் விறைப்புத்தன்மை குறைபாடு(Erectile Dysfunction), தசைகளின் வலிமை குறைந்து, எப்போதும் சோர்வாக உணர்வது, விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரம் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்பும் உருவாகலாம்.












Comments
Post a Comment