எனக்கு ஒரு பிரண்ட் இருந்தான். Grindr(GR) ல தான் பழக்கம், கனடால இருந்தான். என்னை விட 2 வயசு கம்மி. 2022 லிருந்து பேசிட்டு இருந்தோம். நான் அவன்கிட்ட கனடால Job இருந்தா சொல்லுடானு கேட்டு இருந்தேன்.
நான் ஊருக்கு வரும் போது சொல்றேனு சொல்லி இருந்தான். போன வருசம் 2025 Feb போல ஊருக்கு வந்தான். வந்து ஒரு பத்து நாள் கிட்ட கால் பண்ணி பேசினோம்.
மீட் பண்ணி HF(High Fun) பண்ணலாம்னு கூட ப்ளான் பண்ணோம். ஆனா அதுக்கு பிறகு அவன்கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை. போன் நம்பர் அவுட் ஆப் நெட்வொர்க், GR ல வரலை, வாட்ஸ்அப், டெலிகிராம் எதுலயும் ஆக்டிவா இல்லை.
நானும் சரி.. பிடிக்கலை போலனு விட்டுட்டேன். கொஞ்ச நாள் முன்ன அவனோட பிரண்ட் ஒருத்தன் கிட்ட பேசினேன். இவன் என்னடா ஆனான்.. எதுலயுமே ஆக்டிவா இல்லையேனு கேட்டப்போ அவன் தற்கொலை பண்ணிகிட்டானு சொன்னான்.
என்னால நம்பவே முடியலை.. ஏன்னா தற்கொலை பண்ணிக்க அவன் கிட்ட எந்த காரணமும் இல்லை. நல்ல வசதியான பையன். காதல் தோல்வி, கத்தரிக்காய் எதுவும் இல்லை. நல்ல ஜாப்ல இருக்கான். கனடால ஒரு பெரிய ஆஸ்பிட்டல்ல மைக்ரோபயாலஜிஸ்ட்டா இருந்தான். பின்ன என்னதான்டா ஆச்சுனு கேட்டப்போ அவனுக்கு வந்தவுடனே பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி இருக்காங்க.
வீட்ல சொல்றாங்கனு அவனும் பண்ணிட்டான், 28 வயசுலயே. ஆனா அவன் ஒரு ப்யூர் Gay. அதுக்கு பிறகுதான் என்னோட பேசறதை நிப்பாட்டி இருக்கான். என்னோட மட்டுமில்லை. வேற எந்த Gay or Bisexual பையன் கூடயுமே அப்புறம் பேசலை.
ஆனா அவனோட Wife அவன் Gay ன்றதை கொஞ்ச நாள்லயே Smell பண்ணிட்டாங்க. முச பிடிக்கிற நாய் மூஞ்சியைப் பார்த்தால் தெரியாதா? அவன் வீட்ல இல்லாதப்ப போன்(Phone) எல்லாம் எடுத்து அவன் Chat details and Video Evidence எல்லாத்தையும் எடுத்துட்டாங்க.
பிறகு அவங்க வீட்ல போய் எல்லாத்தையும் காமிச்சி, பொண்ணு வீட்ல வந்து பிரச்சினை பண்ணி ஊர்ல, Relatives எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சு. அவனோட Normal Childhood Friends, College Friends எல்லாருக்கும் தெரிஞ்சி போய் எல்லாரும் அவன் கூட பழகுறதை நிப்பாடிட்டாங்க.
வீட்லயும் Parents எப்பவுமே, இதை சொல்லி திட்டி இருக்காங்க. தெருல எங்காச்சும் நடந்து போனா கூட வானவில் அப்படின்னு எல்லாரும் கிண்டல் பண்ணி இருக்காங்க. ஒருநாள் தாங்க முடியாம Rat Poison சாப்பிட்டு இறந்துட்டான்.
இந்த Death நடந்து ஒரு வருடம் மேல ஆயிடுச்சு. ஆனால் எனக்கு ரொம்ப ரீசன்டாதான் தெரிஞ்சிது. நான் அவன் என்னைய பிடிக்காம ப்ளாக் பண்ணிட்டு போயிட்டானு நம்பிட்டு இருந்தேன்.
ஆனா அவன் தற்கொலை பண்ணிகிட்டு செத்தது பெரிய ஷாக். இப்போ இருக்க Girls நம்ம அப்பா, தாத்தா காலத்தில் வாழ்ந்த மாதிரி ஒண்ணும் தெரியாத பாப்பாக்கள் இல்லை. இப்போ எல்லாம் ரொம்ப ஷார்ப். ஒருநாள் உங்க கூட படுத்தாலே உங்க வரலாறு எல்லாம் அவளுகளுக்கு தெரிஞ்சிடும்.
நீங்க ப்யூர் ஹோமோ(Pure Homosexual Men) அப்படின்றபட்சத்தில் முடிஞ்ச வரை பிடிவாதமா இருந்து கல்யாணத்தை அவாய்ட் பண்றது பெட்டர். அப்படியும் மீறி பண்ணா மாரியம்மாள் , காளியம்மாள் , ராக்காயி மாதிரி பத்தாவது தாண்டாத வில்லேஜ் பொண்ணுங்களை மேரெஜ் பண்றது நல்லது. நகரத்து, அதுவும் நல்லா படிச்ச, குறிப்பாக IT யில் வேலை செய்யக்கூடிய பெண்களை கட்டுனா, Survive பண்றது கஷ்டம். அப்படியே பண்ணாலும் எல்லா Contact ம் ப்ளாக் பண்ணி டெலிட் பண்ணிட்டு GR app Uninstall பண்ணி, முடிஞ்சா புது நம்பர், புது போன் மாத்திட்டு அமைதியா இருக்கிறது நல்லது.
இல்லனா, ஏதாவது Lesbian பெண்களை திருமணம் செய்தால் இரண்டு பேருக்கும் வசதியாக அமைந்து விடும். இல்லனா, புரட்சி பண்ணப் போறேன்னு திருநங்கைகளையும்(Transgender) திருமணம் பண்ணலாம்.
இல்லனா, எனக்கு ஆண்மை இல்லை. நாம் ஆம்பளை இல்லை. என்னால ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்று பொய் கூட சொல்லலாம்.
Dorothy போன்ற LGBT சார்ந்த திரைப்படங்கள் வெளியாவதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிப்பது கூட இதனால் தான். வீட்டில் உள்ள பெண்களுக்க்கு விஷயம் புரிந்து விட்டார், அவர்களால் மேலும் முகமூடி அணிந்து கொண்டு வாழ முடியது போகலாம். இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழும் Bisexual ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை அம்பலமாகலாம். பல குடும்பங்கள் சிதையலாம்.
அவன் தற்கொலை பண்ணிகிட்டதை என்னால நம்பவே முடியலை இப்ப வரை. நான் ஒன்னும் Suicide isn't Answer Bro, தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனம் அப்படிலாம் பூமர் டயலாக் பேச வரலை. நானே Suicide Attempt பண்ணி இருக்கேன். Unfortunately அதுல Success பண்ணலை, சக்சஸ் பண்ணிருந்தா இந்த போஸ்ட் வந்திருக்காது.
ஆனா என்னோட பிரச்சனைகள் வேற அவனோட பிரச்சினை வேற. எனக்கு கடன், பண நெருக்கடி. அது Out of Controlல கை மீறி போன பிரச்சனை.
அவன் இதுல கொஞ்சம் பிடிவாதமா, "I am Who I am" ன்ற நிலைபாட்டுல இருந்திருந்தா இந்த மேரேஜ் தவிர்த்து இருக்க முடியும். எனக்கு என்னோட சொந்த பொருளாதார பிரச்சனை. அவனுக்கு Social Stigmatization Issue ரெண்டுமே வலி தரக்கூடியது என்றாலும், அவன் டைவர்ஸ் பண்ணிட்டு உடனே கிளம்பி கனடா போய் இருந்தா இது நடந்திருக்காது. அதுனால நீங்க பியூர் கே, மேரேஜ் பண்ண போறீங்கனா கொஞ்சம் சபலம் ஏற்பட்டா கூட பின்விளைவுகள் மோசமா இருக்கும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி Don Raj

Comments
Post a Comment