ஆண்கள் ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்யும் போது அடிவயிற்று பகுதிக்கு பக்க பலமாக இருக்க, Support ஆக இருக்க ஜட்டி அணிவது அவசியமாகும். ஜட்டி போடாமல் ஆண்கள் ஜிம்மிற்கு சென்று பாரம் தூக்கும் உடற்பயிற்சிகள் செய்யும் போது குடலிறக்க நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
அப்படியிருக்கையில், ஆண்களால் ஜட்டி போடாமல் Gym Shorts அணிய முடியுமா என்று கேள்வி கேட்பதே விசித்திரமாக உள்ளதா? ஆனால் ஆண்கள் விரும்பினால் Gym Shorts அணியும் போது ஜட்டி அணியத் தேவையில்லை என்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா?
Gym Shorts என்றால் என்ன? Gym Shorts என்பது உடற்பயிற்சி செய்யும்போது அல்லது ஜிம்மிற்குச் செல்லும்போது அணிந்துகொள்ளும் குறுகிய கால்சட்டை(Shorts) ஆகும். எடை தூக்கும் போதும், ஓடும் போதும், உடலை நீட்டிப் பயிற்சி செய்யும் போதும் கால்கள் எளிதாக அசைய இது உதவுகிறது. காட்டன்(Cotton), பாலியஸ்டர்(Polyester) அல்லது ஸ்பான்டெக்ஸ்(Spandex) போன்ற துணிகளால் செய்யப்படுவதால், வியர்வையை விரைவாக உறிஞ்சி உடலை உலர்வாக வைக்கிறது.
Gym Shorts இல் பிரதானமாக சில வகைகள் உள்ளன. அவை Compression Shorts, Running Shorts, Pocket Shorts ஆகும். கம்பிரஷன் ஷார்ட்ஸ்(Compression Shorts) என்பது உடலோடு ஒட்டியவாறு இருக்கும் உள்ளாடை போன்ற ஷார்ட்ஸ் ஆகும். இது தசைப்பிடிப்பைத் தவிர்க்க உதவுகிறது. ரன்னிங் ஷார்ட்ஸ்(Running Shorts) என்பது ஓடுவதற்கு வசதியாக இலகுவாகவும், சற்று மேலாகவும் முடியக்கூடிய ஷார்ட்ஸ்கள் ஆகும். பாக்கெட் ஷார்ட்ஸ்(Pocket Shorts) என்பது போன் அல்லது சாவியை வைத்துக்கொள்ள பாக்கெட் வசதியுடன் வரும் ஷார்ட்ஸ்களாகும்.
கம்பிரஷன் ஷார்ட்ஸ்(Compression Shorts) அணியும் போது ஆண்கள் தனியாக ஜட்டி போடத் தேவையில்லை. கம்பிரஷன் ஷார்ட்ஸ் உடலோடு ஒட்டி, அந்தரங்கப் பகுதிக்கு தேவையான ஆதரவை(Support) வழங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு உள்ளாடையின் வேலையைச் செய்வதால், தனியாக ஜட்டி அணிய தேவையில்லை. ஜட்டிக்கு மேலே கம்பிரஷன் ஷார்ட்ஸ் அணியும் போது, துணிகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தோலில் எரிச்சல், அரிப்பு அல்லது தடிப்புகள்(Chafing) ஏற்படலாம்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் Compression Shorts யை அணிந்திருக்கும் போது மற்றவர்களால் உங்கள் அந்தரங்கப் பகுதிகளின் Shape, Outline களை எளிதாக அவதானிக்கக் கூடியதாக இருக்கும். இது உங்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கலாம்.
அதனை தவிர்க்கும் விதமாக சிலர் Compression Shorts இற்கு மேலே மேலும் தளர்வான ஒரு Shorts யை அந்தரங்கப் பகுதிகளை மறைக்கும் வகையில் அணிவர். இவை இரண்டையும் ஒன்றாக இணைத்தால் என்ன? என்று யோசித்த Sports Clothing Brands, சந்தைக்கு அறிமுகம் செய்தது தான் Gym Shorts with Compression Liner வகை Gym Shorts களாகும்.
இந்த வகை Gym Shorts களை ஆண்கள் அணியும் போது தாராளமாக ஜட்டி போடாமல் Gym Shorts யை அணியக் கூடியதாக இருக்கும்.














Comments
Post a Comment