நான் பலவருஷங்கள் முன்பு ஆலய கட்டுமானம் சம்பந்தமான ஒரு சிற்பச் செந்நூலில் படித்த ஒரு கருத்தை இங்கு நான் பதிவு செய்கிறேன்.
ஒரு ஆணின் மார்பகப் பகுதி எப்படியிருக்க வேண்டுமென்றால், அது ஒரு முரட்டுக்காளையின் முகம் போல இருக்கவேண்டுமாம்! அவன் மார்பின் முலைக்காம்புகள் இரண்டும் காளையின் இரண்டு கண்களாகவும், அதற்கு கீழேயுள்ள அடுத்த பகுதி காளையின் நீண்ட முகமாகவும், அவன் வயிறு முடியுமிடம், காளையின் மூக்குத்துவாரம், மற்றும் வாய்ப் பகுதியாகவும் நாம் கண்டால், அங்கே ஒரு முரட்டுக் காளையின் முகம், தெளிவாகத் தெரியும்!
அவன் தனது இரு கை முனையையும் பறவை இறகு போல மடக்கி அக்குளில் வைத்துக் கொண்டால், அதுவே காளையின் கூம்பான இரு காதுகள் ஆகிவிடும் என்கிறார்கள். கனி மரம் போல் வளமையாய் இருப்பதால் இளம் பெண்ணைக் கன்னியர் என்றும், மார்பு ஒரு காளை போல் இப்படி இருப்பதால் ஆண்களை (காளை) காளையர் என்றும் பண்டைய முன்னோர்கள் அழைத்தார்களாம்.
Keywords: ஆண்களின் மார்பகங்களை காளைகளின் முகத்துடன் ஒப்பிடும் சிற்ப சாஸ்திர நூல்கள். சிற்ப சாஸ்திரங்கள் முரட்டுக் காளையின் முகத்துடன் ஒப்பிடும் ஆண்களின் மார்பகங்கள். சிற்ப சாஸ்திர நூல்கள் ஆண்களின் மார்பகங்களை எப்படி பார்க்கின்றன? சிற்ப சாஸ்திர நூல்கள் ஆண்களின் மார்பகங்களை எப்படி வர்ணிக்கின்றன?





Comments
Post a Comment