அந்த காலத்து கிராமத்து நினைவுகளில் பிரதான இடம் வகிப்பது ஆண்கள் பம்பு செட் தண்ணீரில் குளித்த அனுபவங்கள் ஆகும். இன்றும் அது சில இடங்களில் காணப்பட்டாலும், அதனை மிக அரிதாகவே எல்லா ஆண்களாலும் அனுபவிக்கக் கூடியதாக உள்ளது.
பம்புசெட்(Pump set) என்பது கிணறு, ஆழ்துளைக் கிணறு(Borewell) அல்லது நீர்நிலைகளில் இருந்து விவசாயம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்காகத் தண்ணீரை மேலே இறைக்கப் பயன்படும் ஒரு இயந்திர அமைப்பாகும். இதில் ஒரு மோட்டாரும், தண்ணீரை உறிஞ்சித் தள்ளும் பம்பும் இணைக்கப்பட்டிருக்கும். இறைக்கப்படும் தண்ணீர் ஒரு பெரிய நீர் தொட்டியில் நிறைந்தே விவசாய நிலங்களுக்கு வெளியேறும்.
ஒரு காலத்தில் கிராமங்களில் பம்பு செட் தண்ணீரில் குளித்ததும், வயலில் விளையாடியதும், நண்பர்களுடன் சேர்ந்து நேரம் கழித்ததும் மறக்க முடியாத நினைவுகள்! நீச்சல் தடாகங்களின்(Swimming Pool) வருகையால், இன்றைய தலைமுறைக்கு சாதாரணமாகத் தோன்றும் இந்த பம்பு செட், நம்மில் பலருக்கு சிறுவயது நினைவுகளின் ஒரு பகுதி ஆகும். உங்களுக்கும் பம்பு செட் நினைவுகள் இருக்கா?















Comments
Post a Comment