சீசனல் டவல், குற்றாலத்துண்டு எனப்படும் இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு குளிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இடுப்பில் கட்டிக் குளிக்க துண்டு இல்லாவிட்டால் வேட்டி, வேட்டியின் சால்வையைக் கூட இடுப்பிக் கட்டிக் கொண்டு பொது இடங்களில் ஈராடுவர்.
ஆனால் அவ்வாறு நீராடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகவே வேட்டிகளும், வேட்டியின் சால்வையும்(அங்கவஸ்திரம்) ஈரமானதும் உடலுடன் ஒட்டி உங்கள் அந்தரங்கத்தை அப்பட்டமாக வெளிக்காட்டி விடும். அதிலும் குறிப்பாக வெள்ளை நிற வேட்டி, அல்லது சால்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்கும் போது ஆண்கள் அதிமாக இந்த பிரச்சனையை சந்திப்பர்.
இவ்வாறான தருணங்களை தவிர்க்க, ஆண்கள் அவசியம் உள்ளே ஜட்டி அணிந்தே பொது இடங்கள் வேட்டி அல்லது சால்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு குளிக்க வேண்டும். அவ்வாறு அணியும் ஜட்டியானது உங்கள் தோலின் நிறத்தை ஒத்த நிறத்தில் இருந்தால் அவை ஈரமான ஜட்டியினூடாக தனித்து வெளித்தெரியாது.
கைவசம் மாத்து ஜட்டி(வேறு ஜட்டி) இல்லாவிட்டால், ஓரமாக, ஒதுக்குப்புறமாக சென்று, வேட்டியை ஒரு துண்டின் அளவுக்கு பல துணி அடுக்குகளாக மடித்து, இடுப்பில் கட்டிக் கொள்ளும் போது, அந்த துணி அடுக்குகளின்(Fabric Layers) காரணமாக, வேட்டி ஈரமானால் கூட முழுசா வெளித்தெரியாது.










Comments
Post a Comment