ஆண்கள் சட்டையை பேண்டினுள் சொருகி Tuck In செய்து, Formal Dress இல் நேர்த்தியாக தம்மை வெளிக்காட்டிக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றை சிறப்பாக செய்ய உதவியாக இருக்கும் Gadgets or Accessories களை Shirt Stays என்பர். இந்த Shirt Stays இல் பல வகைகள் உள்ளன. உதாரணமாக Men Shirt Stays Clips, Men Shirt Stays Belts போன்றவற்றை கூறலாம். Shirt Stays என்பது Tuck In செய்த சட்டையை எப்போதும் ஒரே நிலையில் வைத்திருக்க உதவும் ஒரு சாதனமாகும்.
சட்டையை பேண்டினுள் விட்டு Formal Dress அணியும் போதெல்லாம், கையை தூக்கும் போதும், குனியும் போதும், எதையாவது எட்டி எடுக்கும் போதும் நீங்கள் பேண்டினுள் சொருகிய சட்டை வெளியே வந்து உங்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குமா? அடிக்கடி சட்டையை Tuck In செய்ய வேண்டிய நிலைக்கும் ஆளாகும் நபரா நீங்கள்? எப்போ பார்த்தாலும் சட்டையை பேண்டிற்குள் ஓட்டிக் கொண்டே இருக்கும் நபரா நீங்கள்? என்ன தான் அயன் செய்து அணிந்தாலும், உங்களை Formal Dress இல் பார்க்கும் போது கவர்ச்சியாக தெரியவில்லையா? அப்படியென்றால் நீங்களும் Shirt Stays பயன்படுத்தி பார்க்க வேண்டியது அவசியமாகும். ஆனால் Shirt Stays பயன்படுத்தினால் மாத்திரம் போதுமா?
ஆனால் இவற்றை பயன்படுத்தியும், நாள் முழுவதும் பிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல அலுங்காமல் குலுங்காமல், சட்டை கசங்காமல் இருக்க வேண்டும் என்றால் ஆண்கள் சட்டை, பேண்டை அளவெடுத்து தைக்க வேண்டும்.
Ready Made ஆக வாங்கும் சட்டை, பேண்ட்களைக் கூட உங்கள் அளவுக்கு ஏற்றால் போல, ஒரு நல்ல டெய்லரின் உதவியுடன் Alter செய்து அணிய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே Shirt Stays பயன்படுத்தி சிறப்பாக உங்கள் தோற்றத்தை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
இவ்வாறான Shirt Stays Gadgets பயன்படுத்த விரும்பாத ஆண்கள், அணிந்திருக்கும் ஜட்டிக்குள் சட்டை, பனியனை Tuck In செய்வதும் உண்டு. இதனை Underwear Tuck In என்பர்.
Keywords: Most men have never heard of shirt stays. They go on before the shirt. Clip on the front, clip on the back, and the shirt stays tucked all day. Sit down, arms up, stand up. Still in. No belt needed. Send this to someone who keeps re-tucking their shirt.







Comments
Post a Comment