அன்றாட வாழ்க்கையில் வேட்டி, லுங்கி, சாரம் அணியும் ஆண்கள் குளிக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் முகம் கழுவிய பின்னர் ஈரமான முகத்தை துடைப்பதற்கும், கை கழுவிய பின்னர் ஈரமான கைகளை துடைப்பதற்கும், வியர்க்கும் போது வியர்வை வழியும் கைகள், நெஞ்சு, முகம் போன்ற பகுதிகளை துடைப்பதற்கும், மழையில் நனைந்த தலையை, தலைமுடியை துடைப்பதற்கும் துண்டை, டவலை பயன்படுத்துவதற்குப் பதிலாக லுங்கி, வேட்டியின் கீழ் முனையை தூக்கி பயன்படுத்துவர்.
தனிமையில் இருக்கும் போது இதனை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் பொது இடங்களில் பலர் முன்னிலையில் இவ்வாறு வேட்டியை, லுங்கியை நன்றாக தூக்கி துடைக்கும் போது கீழே உங்கள் அந்தரங்கப் பகுதி வெளியே எடிப்பார்க்கலாம். தொடை தெரிந்தால் கூட பரவாயில்லை. ஏதோ ஒரு ஞாபகத்தில் ஜட்டி போடாமல் லுங்கி, வேட்டி, கட்டியிருக்கும் போது இவ்வாறு அளவுக்கு அதிகமாக தூக்கி துடைக்கும் போது உங்கள் அந்தரங்கமும் வெளியே எட்டிப் பார்க்கலாம்.
அதனை தவிர்க்க, நிமிர்ந்து நின்று கொண்டே அதிகமாக லுங்கி, வேட்டியை தூக்குவதற்குப் பதிலாக, சற்று சரிந்து, குனிந்து இவ்வாறு அணிந்திருக்கும் லுங்கி, வேட்டியின் முனையை தூக்கித் துடைக்கலாம்.









Comments
Post a Comment