நாம் வாழும் சமூகத்தில் ஆண்கள் அன்றாடம் அணியும் காட்டன் ஜட்டிகளுக்கும்(Cotton Underwear), ஆண்கள் நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடும் போதும், நீச்சல் தடாகங்களில் நீந்தும் போதும், பொது இடங்களில், நீர் நிலைகளில் குளிக்கும் போதும் அணியும் Swimming Briefs, நீச்சல் ஆடைகளுக்கும் வித்தியாசம் தெரியாது, அவற்றை அணிபவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறார்கள்.
பொதுவாக ஹோட்டல்களில் இருக்கும் Swimming Pool களில் பருத்தியினால் ஆன ஜட்டிகளை(Cotton Underwear) அணிந்து குளிப்பதற்கு அனுமதிப்பதில்லை. அதற்குக் காரணம், சிலர் அன்றாடம் அணியும், நாள் முழுவதும் அணிந்திருந்த அழுக்கு ஜட்டிகளுடன்(Dirty Underwear) Swimming Pool களில் இறங்கி மற்றவர்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்குவதை தவிர்ப்பதற்கு ஆகும்.
ஆனால் நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை கழட்டிய பின்னர், அங்குள்ள Public Shower இல் குளித்து விட்டு, Speedo வகை ஆண்களுக்கான Swimming Briefs நீச்சல் ஆடையை அணிந்து நீச்சல் தடாகங்களில் இறங்குவது அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆனால் சில ஹோட்டல் ஊழியர்கள் Swimming Briefs களையும் சாதாரண ஆண்கள் ஜட்டிகள் என கருதி, அவற்றை அணிந்து குளிப்பதையும் தடுக்கிறார்கள்.
நீச்சலுடையை வைத்து ஒருவரை நாம் எடைபோடுகிறோமா? எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் குறித்து உங்கள் கருத்துகளை அறிய விரும்புகிறேன்.
நான் பொதுவாக நீச்சல் தடாகங்களில் நீந்தும் போது "ஸ்பீடோ"(Speedo) வகையைச் சார்ந்த, கட் ஜட்டிகள்(Briefs) போன்ற நீச்சலுடைகளை(Swimming Briefs) அணியவே விரும்புகிறேன். ஆனால், நகர்ப்புறங்களில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் கூட, "நீச்சல் குளத்திற்குள் உள்ளாடைகளை(Underwear) அணிந்து பயன்படுத்த அனுமதி இல்லை" என்று Swimming Briefs அணிந்திருந்த என்னிடம் கூறினார்கள்.
அப்போது நான், "இவை ஆண்கள் அன்றாடம் பயன்படுத்தும் காட்டன் உள்ளாடைகள் அல்ல; இவை நீந்துவதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டவை" என்று விளக்க வேண்டியிருந்தது.
"ஸ்பீடோ"(Speedos), Swimming Briefs நீச்சலுடைகள் செயற்கை இழைகளால் ஆனவை. குறிப்பாக நைலான், பாலியஸ்டர், எலாஸ்டேன்(ஸ்பான்டெக்ஸ்/லைக்ரா) மற்றும் பிரத்யேகக் கலவைகளைக் கொண்டு இவை தயாரிக்கப்படுகின்றன.
இது எனக்கு ஒரு கேள்வியை எழுப்பியது.. நீச்சலுடைகளை அதன் பயன்பாட்டை வைத்து நாம் அடையாளம் காண்கிறோமா, அல்லது அதன் தோற்றத்தை வைத்து மட்டும் எடைபோடுகிறோமா?
நான் கவனித்தவரை, ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆண்கள் கடற்கரைகளிலும் நீச்சல் குளங்களிலும் இத்தகைய நீச்சலுடைகளை அணிவதில் மிகவும் இயல்பாக இருக்கிறார்கள்.
ஆனால், நமது நாட்டைச் சேர்ந்த ஆண்களிடையே இதைக் காண்பது அரிது. இது அவர்களின் தனிப்பட்ட விருப்பமா, கூச்சமா, அல்லது மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற கவலையா? நிச்சயமாக, எனது இந்த அவதானிப்பு அனைவரின் அனுபவத்தையும் பிரதிபலிக்காமல் இருக்கலாம்.
எல்லோரும் ஒரே மாதிரியான உடைகளைத்தான் அணிய வேண்டும் என்பதில்லை. சிலர் நீச்சல் பயிற்சிகளின் போது ஸ்விமிங் ஷார்ட்களை(Swim Shorts), Swim Trunks அணிவதை செளகரியமாக உணரலாம். மற்றவர்கள் கட் ஜட்டி போன்ற நீச்சலுடைகளை(Swimming Briefs) விரும்பலாம்.
இத்தகைய தேர்வுகளைச் செய்வதற்கு நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறோம்? நீச்சலுடை காரணமாக நீங்கள் எப்போதாவது சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்களா? அல்லது மற்றவர்களின் எதிர்வினையைக் கண்டு, உங்களுக்குப் பிடித்தமான உடையை அணியத் தவிர்த்திருக்கிறீர்களா?
ஹோட்டல்கள் மற்றும் நீச்சல் வசதிகள் கொண்ட இடங்களில் பணிபுரிபவர்களின் கருத்துகளையும் அறிய விரும்புகிறேன். இத்தகைய கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?
நமக்கு வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும், ஒருவரை ஒருவர் மதிக்க முடியும். யாரையும் அவமதிக்காமல், வெளிப்படையான உரையாடலை மேற்கொள்வோம்.




Comments
Post a Comment