இந்திய கிரிக்கெட் வீரர்களை எடுத்துக் கொண்டால் அதில் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட முக்கியமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி(Virat Kohli) ஆவார். ஆனால் அவர் தனது ரசிகர்களை தன்னுடைய கிரிக்கெட் விளையாடும் திறமையால் மாத்திரம் தேடிக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்.
விளையாட்டு வீரர் Virat Kohli வெறுமனே ஒரு கிரிக்கெட் வீரராக திகழாமல் பெண்களின் கனவு நாயகனாக மாத்திரமல்லாது, ஆண்களின் கனவு நாயகனாக மாறியதற்குக் காரணம் கூட கிரிக்கெட் விளையாட்டு அல்ல.
அவர் தன் திறமையால், தன் மீது அதிக கவனத்தை ஊடகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளும் போது தன்னை உடற்பயிற்சிகள் மூலம் செதுக்கி ஆண்மைமிக்க நபராக வெளிக்காட்டினார். தன்னுடைய Hairy Styles, முதல் Body Hair வரை சிறப்பாக Grooming செய்ததனால் ஆண்களின் Grooming Products சார்ந்த விளம்பரங்களிலும் தன்னை மிளிரச்செய்தார்.
தன்னுடைய வளர்ச்சியுடன், தன்னுடைய Dressing Sense யையும் சிறப்பாக மேம்படுத்தி, Dressing Sense யை வைத்தே பலரை விளையாட்டையும் தாண்டி கவர்ந்தார். அதன் மூலம் அதிக Followers களை சமூகவலைத்தளங்களில் தேடிக் கொண்டார். Followers யை வெறுமனே தேடிக் கொண்டு காயப் போடாமல், அதனை வைத்து வியாபாரமும் செய்ய ஆரம்பித்தார்.
தன்னுடைய கிரிக்கெட் ஜெர்சியின் நம்பரான 18 யை வைத்து One8 என்ற Clothing Brand யை உருவாக்கினார். யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருடைய ஜட்டி கம்பனியின் ஜட்டி விளம்பரங்களில் ஜட்டியுடன் நடித்து பார்ப்பவர்களை திக்குமுக்காடச் செய்தார்.





















Comments
Post a Comment