கடவுள் நமக்கு வாழ்க்கையையும்(புள்ளிகள்), அதற்கான சூழலையும் அமைத்துக் கொடுக்கிறார். ஆனால், அந்த வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், என்னவாக மாற்ற வேண்டும்(கோலம்) என்பதை மனிதன் தன் சுயமுயற்சியாலும் உழைப்பாலும் தான் தீர்மானிக்கிறான் என்ற வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தும் விதமாக, நடிகர் விவேக் நடித்த நகைச்சுவைக் காட்சி யூத்/Youth(2002) தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.
அந்த திரைப்படத்தில் பொலிஸிற்கு பயந்து பெண்(Maggie) போல மாறுவேஷம் போட்டுக் கொண்டு Modeling Show இல் நடிகர் விவேக் கலந்து கொள்கிறார்.
பொலிஸிடம் இருந்து தப்பித்து வெளியேற முற்படும் போது, அவரை தனிமையில் சந்திக்க ஒரு செல்வந்தர் அழைக்கிறார். அருகில் பொலிஸ் நடமாட்டம் இருப்பத்தை உணர்ந்த விவேக், ஆபிரேஷன் செய்து பெண்ணாக மாறியது போல நடிப்பார்.
பெண் தோற்றத்தில் இருக்கும் நடிகர் விவேக்கை தன்னுடன் உடலுறவு கொள்ள அழைக்கும் அந்த செல்வந்தர், விவேக்கின் தொப்புள் அலங்காரத்தை காட்டி, இது என்ன பாம்பே பேஷனா என்று கேட்பார்.
அதற்கு தன் வாழ்க்கையை தன் இஷ்டம் போல மற்றிக் கொண்டதை வெளிப்படுத்தும் விதமாக "கடவுள் புள்ளி வெச்சான் அத சுத்தி நான் கோலம் போட்டேன்" என்று கூறுவார்.
அது போல தான் நம்ம வாழ்க்கையும் நம்ம எதிர்பார்ப்பது போலவே எப்போதும் போகாது. ஏதோ ஒரு நாள் அது மாறும். அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு வாழ தயாராக வேண்டும்.







Comments
Post a Comment