ஆணுறுப்பு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை எவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும்? ஆண்களுக்கு 35 வயது வரை வீரியமும் அழகும் டாப்பில் இருக்கும், மசாஜ் என்பதே இந்த வயதில் தேவை இருக்காது.
40 வயதை எட்டிய ஆண்கள் வகையில் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு/சக்கரை நோய், உயர் குருதி அழுத்தம், இருதய நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உடல் எடையை ஆரோக்கியமாக பேணி, நடைப்பயிற்சிகள் செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் லிபிடோ(Libido) சற்று அதிகமாகும்.
நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஏதாவது ஒரு எண்ணையை 100ml எடுத்து இரண்டு பூண்டை தட்டி போட்டு, நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சூடு தணிவதற்குள், சிறிது பச்சை கற்பூரம் போட்டு காய்ச்சி, ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
பூண்டு: இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு(Anti-inflammatory) பண்புகள் மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
பச்சை கற்பூரம்: இது ரத்த ஓட்டத்தை சீராக்கி, தசைப்பிடிப்பு மற்றும் வலியை உடனடியாகக் குறைக்கும் ஒரு இயற்கை வலி நிவாரணியாகச் செயல்படுகிறது.
நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய்/இலுப்பை எண்ணெய்: இவை சிறந்த கடத்தி எண்ணெய்களாகச்(Carrier Oils) செயல்பட்டு, பூண்டு மற்றும் கற்பூரத்தின் மருத்துவ குணங்களை உடலின் உட்பகுதிக்குக் கொண்டு சேர்க்கின்றன. குறிப்பாக இலுப்பை எண்ணெய் வாத வலிக்கு மிகவும் சிறந்தது.
அடுப்பை அணைத்த பிறகே பச்சை கற்பூரத்தைச் சேர்க்க வேண்டும். கொதிக்கும் போதே சேர்த்தால் கற்பூரம் ஆவியாகிவிடும்.
இதை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை உபயோகித்து ஆண்குறிக்கும், விதைப்பைக்கும், மற்றும் அந்தரங்கப் பகுதியைச் சூழவும் மசாஜ் செய்து வாருங்கள். மசாஜ் செய்யும் போது ஆசனவாயை(குண்டி ஓட்டையை) குறைந்தது ஒரு 20 முறையாவது திறந்து மூட வேண்டும்.
ஆண்குறி, வயிற்றுக்கு கீழ் தொடை ,தொடை இடுக்கு ஆசனவாயை சுற்றி, ஆசனவாயில் இரண்டு சொட்டு விட்டு நன்றாக அழுத்தி மசாஜ் செய்து வாருங்கள். விருத்தசேதனம்(சுன்னத்) செய்யப்படாத ஆண்குறியின் முன் பகுதியை பின்னால் இழுத்து விட்டு நன்றாக கழுவி இந்த எண்ணெயை போட்டு முன்னும் பின்னுமாக ஒரு 30 முறையாவது செய்து கலவிக்கு தயாராகும் நிலை வந்தவுடன் நிறுத்தி விடுங்கள்.
Perineum(ஆசனவாய்க்கும் விதைப்பைக்கும் இடையில் இருக்கும்) பகுதியில் இதை தடவி விரல் வைத்து அழுத்தியும் அல்லது மசாஜ் ரோலர்களால் ஐந்து நிமிடங்களாவது குறைந்தது மசாஜ் செய்ய வேண்டும்.
இது போல் வாரம் இரண்டு மூன்று முறை செய்து வரின் தாம்பத்திய வாழ்க்கை என்பது 50 வயதுக்கு மேலும் கவலை இன்றி தொடரச் செய்யலாம்.
ராணுவத்தில் தனக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியை வீரர்கள் தினமும் துடைத்து சுத்தமாக வைத்திருப்பார்கள். இது போலத்தான் ஆண்கள் தமது குறியை சுத்தமாக வைத்திருத்தல் நலம். ஆண் தனது ஆண்குறி முனையை சுத்தமாக வைத்திருப்பாரானால் பெண்களுக்கு யூட்ரஸ் நுழைவில்(கர்ப்பப்பையின் வாய்) கேன்சர் வருவது தவிர்க்கப்படும். ஒரு ஆண் இது போன்று தன்னை பராமரித்து வந்தால் மூத்திர குழாய் அடைப்பு என்பது அவர்கள் வயோதிக காலத்தில் இருக்காது.




Comments
Post a Comment