பாக்ஸர் ப்ரீப்ஸ்(Boxer Briefs) மற்றும் ட்ரங்க்(Trunks) ஜட்டி பார்ப்பதற்கு உடலுடன் ஒட்டியது போன்ற ஷார்ட்ஸ் போன்று இருக்கும் ஆண்களுக்கான பிரபலமான ஜட்டி வகைகளாகும்.
பாக்ஸர் ப்ரீப்ஸ்(Boxer Briefs) என்பது பாரம்பரியமான பாக்ஸர் ஷார்ட்ஸின்(Boxer shorts) நீளத்தை கொண்ட உடலுடன் ஒட்டியது போன்ற ஜட்டியாகும்.
ட்ரங்க்(Trunks)/டிரங்க்ஸ் (Trunks) என்பது பாக்ஸர் ப்ரீப்ஸ்(Boxer Briefs) ஜட்டியினதும், கட் ஜட்டி என ஆண்களால் அழைக்கப்படும் ப்ரீப்ஸ்(Briefs) ஜட்டியினதும் வடிவங்களை ஒன்றினைத்தது போன்ற ஒரு Hybrid வகை ஆண்களுக்கான ஜட்டியாது. அதாவது பாக்ஸர் ப்ரீப்ஸ் போன்று ஓரளவுக்கு நீளமான கால்களைக் கொண்டிருந்தாலும், ப்ரீப்ஸ் போன்று ஆண்களின் ஆண்குறியையும் விதைகளையும் பொட்டலமாக்கி ஓரிடத்தில் நிலையாக வைத்திருக்க உதவும் வகையிலும், அந்தரங்கப் பகுதிக்கும் தேவையான சப்போர்ட்டை ஓரளவுக்கு கொடுக்கும் வகையிலும் அமைந்திருக்கும்.
ஆனால் பிரச்சனை என்னவென்றால் பாக்ஸர் ப்ரீப்ஸ் ஜட்டிகள் அணிந்திருக்கும் போது, ஆண்களின் அந்தரங்கப் பகுதியை தாங்கி நிற்காது, ஜட்டி போடாதது போலவே தொங்க வைத்துக் கொண்டிருக்கும். அதன் காரணமாக, சில ஆண்களால் அவர்களின் ஆண்குறி விறைப்பைக் கூட இந்த வகை ஜட்டிகளை வைத்து மறைக்க முடியாத நிலை ஏற்படுவது உண்டு.
கூச்ச சுபாவமுள்ள ஆண்கள் அதிகம் விரும்பி அணியும் ஜட்டியாக பாக்ஸர் ப்ரீப்ஸ்(Boxer Briefs) ஜட்டிகள் உள்ளன. பாக்ஸர் ப்ரீப்ஸ்(Boxer Briefs) மற்றும் ட்ரங்க்(Trunks) ஜட்டி அணிந்திருக்கும் போது ஆண்கள் அனுபவிக்கும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான், அவை தரமான ஜட்டிகளாக இல்லாவிட்டால், ஜட்டியின் கால்கள் உருண்டு கொள்ளும். அதனால் அரைப்பகுதிகளில், தொடைகளில் தோல் சிவத்தல், தோல் சிராய்ப்பு, உராய்வு, கடுப்பு/எரிச்சல், கொப்பளங்கள், ஊசி குத்துவது போன்ற வலி, புண்கள் போன்ற Chafing பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்பு ஏற்படும்.
ஆடைகளை அணிந்திருக்கும் போது குண்டிப் பிளவு வெளித்தெரிவதை மறைக்க விரும்பும் ஆண்களுக்கும், கொழுத்த குண்டிகளை உடைய ஆண்களுக்கும், நீளமான ஆண்குறியை உடைய ஆண்களுக்கும் பாக்ஸர் ப்ரீப்ஸ்(Boxer Briefs) மற்றும் ட்ரங்க்(Trunks) ஜட்டிகள் சிறந்த தெரிவாக இருந்தாலும் கூட தடிமனான, கொழுத்த தொடைகளை உடைய ஆண்களுக்கு அதிகம் அசெளகரியத்தை ஏற்படுத்தும் ஜட்டிகளாக பாக்ஸர் ப்ரீப்ஸ்(Boxer Briefs) மற்றும் ட்ரங்க்(Trunks) ஜட்டிகள் இருக்கும். அதற்குக் காரணம், அவர்கள் இடுப்பளவை வைத்து ஜட்டியை வாங்கினால், அவர்களின் தொடைகளை இறுக்கும் அளவுக்கு, வெட்டும் அளவுக்கு ஜட்டியின் கால் ஓட்டைகள் குறுகியதாக இருக்கும்.







Comments
Post a Comment