Skip to main content

Translate Blog

களவும் கற்று மற

பார்வையாளர் கவனத்திற்கு: இந்த இணையத்தளப்பதிவினை உங்கள் சுய விரும்பின் பெயரில் நீங்கள் பார்வையிடுகிறீர்கள். சில வேளைகளில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் உங்கள் தேவைக்கு அதிகமாக, உங்களை அசெளகரியத்திற்குள்ளாக்குவதாக இருக்கலாம். உங்களுக்கு இருக்கும் சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் ஏனைய உதவிகளுக்கு Support யை நாடவும்.


பாலின ஈர்ப்பு தொடர்பாக கட்டவிழ்த்து விடப்படும் பொய்கள்

இந்த ட்ரான்ஸ்ஜென்டர்ஸ் க்ரூப் நிஜமாவே ஒருவகைல பாவம் தான். ஒழுங்கா முதிர்ச்சியடையத ஆண் குரோமோசோம் குறைபாடால இயற்கையிலேயே பாதிக்கப்பட்டவங்க. குடும்பம் கைவிடாம எமோஷனல் சப்போர்ட் செஞ்சி...மரியாதையான ஒரு வேலை கிடைச்சாவே செக்ஸ் ஒர்க்கரா மெஜாரிட்டி பேர் மாற போறதில்ல. 

Manly Topics Blog
ஒரு ஆண் விருப்பத்தின் பேர்ல எல்லாம் ட்ரான்ஸ்ஜெண்டரா மாற முடியாது. இதே மத்த வானவில் வகையறால மெஜாரிட்டி ஆட்கள் போர்ன் சைட்ல கண்டதையும் பாத்து செக்ஸ் அடிக்ட்டட் ஆகி மனரீதியா கோளாறு ஆனவங்க. 

செக்ஸ் கூட அவங்க பர்சனல் சாய்ஸ்... அவங்க பெட்ரூம்ல Consent ஓட என்ன கருமம் நடந்தாலும் சரின்னு கண்டுக்காம இருந்திடலாம். But இவங்க யாரை போடுறாங்கன்னு வெளி உலகத்துக்கு தெரியாத போது.. நம்ம கண்டுக்காத போது.. இவங்களா வான்டட்டா வந்து அதை வெளிப்படுத்திகிட்டு.. ட்ரான்ஸ்ஜெண்டர் போல சமூகத்தால பாதிக்கப்படுற மாதிரி ஸீன் போட்டுக்கிட்டு இருக்காங்க. 

இவங்க Vile Sexual Desires க்கு(வெறுக்கத்தக்க காம உணர்வுகள்/இழிவான காம இச்சை) Promiscuity(ஒழுக்கமற்ற தன்மை) யை முற்போக்கு கான்செப்ட்ல சேர்த்து ஆதரவு திரட்டி கிட்டு இருக்க Sexual Predators(பாலியல் குற்றவாளிகள்). 

தனக்கே செக்ஸ்ல என்ன வேணும்ன்னு புரிதல் இல்லாம Sexual Orientation க்கு டிசைன் டிசைனா ஒரு பேர் வெச்சிக்கிட்டு. தேடல்லயே பல குடியை கெடுத்துகிட்டு இருக்க ஒரு மாதிரி Mentally Unstable க்ரூப்.

ட்ரான்ஸ்ஜெண்டர்க்ரூப்க்கு(Transgender Groups) சமூகம் கொஞ்சம் பரிதாபம் காட்டும் போது.. பின்னாடியே மத்த வானவில்ங்க வந்து அந்த அனுதாபத்தை கலைச்சி விட்டுட்டு போய்டுதுங்க. இந்த க்ரூப்பை(LGBTQ) விட்டு உஷாரா ட்ரான்ஸ்ஜென்டர்ஸ் விலகனும். இவங்க கூட சேர்ந்துட்டு நியாயம் கேட்டா உருப்படவே முடியாது.

இப்படி ஒரு பதிவை பேஸ்புக்கில் காண நேர்ந்தது. இந்தப் பதிவில் பல பொய்களை எப்படி உண்மை போல, வெறுப்புணர்வை தூண்டும் வகையில் எழுதியிருக்காங்க என்று பார்த்தீங்களா? இந்த மாதிரி சிந்தனை உள்ளவர்களை Homophobia என்னும் மன நிலைமையாக கருதலாம். 

மேலே கூறப்பட்டுள்ள விடையங்களில் உள்ள பொய்களை, அதன் உண்மையை வைத்து வேறுபடுத்திப் பார்ப்போம். இங்கே சுருக்கமான உண்மைச் சரிபார்ப்பு (Short Fact-Check கொடுக்கப்பட்டுள்ளது):

திருநங்கைகள்(Transgender): இது மனம் மற்றும் பாலின அடையாளம்(Gender Identity) சார்ந்தது. குரோமோசோம் குறைபாடு அல்ல.

இருபாலினம்(Intersex): இது மட்டுமே குரோமோசோம் அல்லது பிறப்புறுப்பு மாறுபாடு சார்ந்த உயிரியல் நிலை.

LGBT+ ஈர்ப்புகள்: இது இயல்பான பாலின ஈர்ப்பு(Sexual Orientation). இது ஆபாசப் படங்களால் ஏற்படும் மனநலக் கோளாறு அல்ல என உலக சுகாதார நிறுவனம்(WHO) உறுதிப்படுத்தியுள்ளது.

திருநங்கை என்பது "அடையாளம்"(Identity). ஆண், பெண் பாலினத்திற்கு அடுத்ததாக உல்ள மூன்றாம் பாலினம். ஓரினச்சேர்க்கை/இருபாலினச்சேர்க்கை என்பது "ஈர்ப்பு" (Attraction) சார்ந்தது. இரண்டும் வெவ்வேறானவை.

Homophobia என்றால் என்ன? ஒருவருக்கு ஏன் Homophobia ஏற்படுகிறது?
Homophobia என்பது எந்தவொரு காரணமும் இல்லாமல் தன்னினச்சேர்க்கையாளர்கள் மீது ஏற்படும் வெறுப்பு மாத்திரமல்ல, சிறுவயதில் அல்லது அன்றாட வாழ்க்கையில் தன்னினச்சேர்க்கையாளர்கள் என்றில்லாமல், தன் இனத்தவராலேயே அதாவது ஒரு ஆண் இன்னொரு ஆணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததனால், ஒரு ஆண் இன்னொரு ஆண்யை கற்பழித்ததனால் ஏற்பட்ட மனத் தாக்கத்தினால் கூட இது உருவாகும்.

உங்களுக்குத் தெரியுமா? சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர்வர்கள் தன்னினச்சேர்க்கையாளர்கள் இல்லை. அவர்களை Pedophile என்பர். அவர்களும் ஆண், பெண் குழந்தைகள் என்று வேறுபாடு இல்லாமல் சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவர். ஆண் குழந்தைகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவன் தன்னினச்சேர்க்கையாளன் அல்ல. அதே போல பெண் குழந்தைகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்குபவன் Straight ஆண்(எதிர் பாலீர்ப்பு கொண்ட ஆண்) அல்ல.

"திருநங்கை, திருநம்பி இவர்கள் பாவம்.. இருக்கிறதிலையே ரொம்ப மோசம் இந்த Bisexual தான்.. வெளி உலகத்துக்கு பொம்பளைய‌ புடிக்கும்னு காட்டிப்பானுங்க.. கள்ளதனமா ஆம்பளைட்டையும் போயிப்பானுங்க.. அதை வெளியவும் சொல்ல மாட்டாங்க.. ஊர் உலகத்திற்காக கல்யாணம் கட்டி, குழந்தையும் பெத்துக்குறாங்க. ஆனா பொண்டாட்டிக்குக் கூட சந்தேகம் வராம ஆம்பளைங்கள வப்பாட்டியாவும் வைச்சுக்கிறாங்க. கேள்வி கேட்டா, நான் பக்கா Straight, எனக்கு குழந்தைகள் இருக்குன்னு பத்தினி வேஷம் போடுவாங்க."

Dorothy - Opinion of Having Sexual Relationship with Friends
இந்தக் கேள்வியை ஏன் திருச்சிற்றம்பலம் படம் பார்த்து விட்டு இவங்க கேட்கல?

Dorothy Movie changes the way people see things
இதுலாம் உடல்ரீதியான பாலுணர்வு உங்களுக்குலாம் புரியாதுனு சொல்றாங்க புரோ.... ஒன்னும் வெளங்கமாட்டீங்குது...

எது முற்போக்கு சிந்தனை?

திருநங்கைகள் மீது காட்டும் அனுதாபத்தை மற்ற LGBTQ+ மக்களுக்கு எதிரான வெறுப்பாக மாற்றுவது எந்த வகையிலும் முற்போக்குச் சிந்தனை கிடையாது.

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். திருநங்கையாக இருப்பதும், ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதும், இருபாலின ஈர்ப்பு கொண்டிருப்பதும் ஒன்றல்ல. பாலின அடையாளம், பாலியல் ஈர்ப்பு, பாலியல் நடத்தை ஆகியவை வெவ்வேறான விஷயங்கள். 

இவற்றைக் குழப்பிக்கொண்டு ஒரு முழு சமூகத்தையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாலியல் குற்றவாளிகள் என்று முத்திரை குத்துவது அறியாமை.

திருநங்கைகள் அனைவரும் குரோமோசோம் குறைபாட்டால் உருவானவர்கள் என்பதும் அறிவியல் ரீதியாகத் தவறு. பாலின அடையாளத்தை குரோமோசோம்களால் மட்டுமே தீர்மானிக்க முடியாது. 

அதேபோல், LGBTQ+ மக்களின் பாலியல் ஈர்ப்புக்குக் காரணம் ஆபாசப் படங்கள் அல்லது பாலியல் அடிமைத்தனம் என்று கூறுவதற்கும் ஆதாரமில்லை.

பாலியல் தொழிலில் ஈடுபடும் சில திருநங்கைகளின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், குடும்ப நிராகரிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பாகுபாடு, சமூக ஒதுக்கல் போன்ற காரணிகளையும் ஆராய வேண்டும்.

மரியாதையான வேலைவாய்ப்பும் குடும்ப ஆதரவும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது சரியான கோரிக்கை. ஆனால் மற்ற LGBTQ+ மக்களை இழிவுபடுத்துவதன் மூலம் திருநங்கைகளுக்கு நீதி கிடைக்காது.

பாலியல் உறவுகளில் சம்மதம் அவசியம். ஒருவரின் பாலியல் விருப்பம் அல்லது அடையாளம் மட்டும் அவரைப் பாலியல் குற்றவாளியாக மாற்றாது. உண்மையான பாலியல் வன்முறையையும் சம்மதத்துடன் நடைபெறும் தனிப்பட்ட உறவுகளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.

திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மற்ற LGBTQ+ மக்களின் உரிமைகளைப் பறிக்க வேண்டியதில்லை. அதேபோல், மற்ற LGBTQ+ மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் திருநங்கைகளின் தனிப்பட்ட பிரச்சினைகளைப் புறக்கணிக்கவும் வேண்டியதில்லை.

ஒரு சமூகத்தின் உரிமை மற்றொரு சமூகத்தின் உரிமைக்கு எதிரானது அல்ல. ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு, கண்ணியம், சம உரிமை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே உண்மையான முற்போக்குச் சிந்தனை. பிரிவினையை உருவாக்குவது தீர்வல்ல; புரிதலை வளர்ப்பதே தீர்வு!

LGBT Misunderstandings in Tamil
மிருகங்களுடன் உடலுறவு கொள்பவர்கள் தன்னினச்சேர்க்கையாளர்களா? ஏன் இவ்வாறு தவறான செய்திகளை பரப்புகிறார்கள்?

"இதில் கொடூரமானவங்க Bisexual குரூப்பு தான் . ஆளே கிடைக்கலனா அனிமல் கூடவே செக்ஸ் வச்சிப்பானுங்க . எங்க ஊர்ல ஒருத்தன் இருந்தான் அவன் ஆடு கூட பண்ணிட்டு இருக்கும் போது மாட்டிக்கிட்டான்."

"எங்க ஊர்ல ஒருத்தன் மாடு கிட்ட சாட் போட்டு ஊர் தலைவர் கிட்ட மாட்டிக்கிட்டான், கீழ் சாதிகாரன் உனக்கு மேல் சாதி காரன் மாடு கேட்குதான்னு கொட்டையை நசுக்கி விட்டானுங்க... அவன் அப்போவும் பல பேரை காவு வாங்கிட்டு தான் ஊரை விட்டுட்டு காலி பண்ணி போனான்... அவன் என்ன வகையறான்னு யாருக்கும் தெரில"

இதனை Bestiality, Zoophilia என்பர்.

Keywords: Dorothy

Comments

Popular posts from this blog

உடலுறவு கொள்வதற்காக மாத்திரம் பழகும் ஆண்கள் - மனக்கோளாறு

வெறுமனே செக்ஸ் வைத்துக் கொள்வதற்காக மாத்திரம் உங்களை ஒரு ஆண் அணுகினால் அவனுடன் படுப்பீர்களா? நிச்சயமாக யோசிப்பீர்கள், இல்லையா? ஆனால் காதலிப்பதாக கூறி, உங்கள் மீது விருப்பம் உள்ளதாக கூறி, வாழைப்பழம் போல இனிக்க இனிக்க பேசி, நம்பவைத்து, ஓத்து விட்டு கழட்டி விடும் ஆண்களை, உண்மையாக காதலித்து, ஒருவனுக்கு ஒருத்தி/ஒருவனுக்கு ஒருவன் என்று வாழும் ஆண்களிடம் உங்களால் இருந்து எளிதில் வேறுபடுத்தி அறிய முடியாது.  அதற்குக் காரணம் சில நபர்களிடம் இருக்கும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதில் இருக்கும் கோளாறு ஆகும். அதனை Avoidant Attachment Disorder என்பர். இவர்கள் யாரும் அரிப்பெடுத்துப் போய் உடலுறவு கொள்ள அலையும் Sex Addicts கிடையாது. இவர்கள் சாதாராண உறவுகளை சீர்குழைப்பவர்கள். உறவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், உணர்ச்சிகளிலிருந்து அல்லது நெருக்கத்திலிருந்து விலகி நிற்கும் தன்மை (Avoidant Attachment) என்றால் என்ன? இதைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே நல்லது. "தவிர்ப்பு வகை பிணைப்பு கோளாறு"(Avoidant Attachment Disorder) கொண்ட ஒருவரை நீங்கள் ஒருபோதும் சந்திக்கக்கூடாது, என்று தான் நா...

உள்ளாடை தெரிவுகளில் தாக்கம் செலுத்தும் இன்ஃப்ளூயன்சர்

ஒரு ஆணுடைய உள்ளாடைத் தெரிவை, அதாவது அவன் அன்றாடம் அணியும் ஜட்டி, பனியனை அவ்வளவு எளிதாக மாற்றி விட முடியாது. அதற்குக் காரணம், அவற்றை அவன் தெரிவு செய்து அணிய எடுத்துக் கொண்ட பிரயத்தனம் ஆகும். ஒரு ஆண் தெரிவு செய்து அணியும் ஜட்டி, அவனுடைய அந்தரங்கப் பகுதிகளின் மேல் ஒரு பாலாடை போல ஒட்டி உறவாட வேண்டும். அதே நேரம் அவன் எதிர்பார்க்கும் Support யை அவனுடைய அந்தரங்கப் பகுதிக்கு கொடுக்க வேண்டும். நீண்ட நேரம் அதனை அவன் எந்தவொரு அசெளகரியமும் இல்லாமல் அணிந்திருக்க முடியுமாக இருக்க வேண்டும். அவுத்துப் போட்டு ஜட்டியுடன் நிற்கும் போது அந்த ஜட்டி, அவனை கவர்ச்சியாக வெளிக்காட்ட வேண்டும்.  இதையெல்லாம் பார்த்து பார்த்து, நான்கைந்து கடை ஏறி இறங்கி, ஒன்றுக்கு பல உள்ளாடை பிராண்ட்களை(ஜட்டி பிராண்ட்) வாங்கி அணிந்து பார்த்து, தனக்கான சிறந்த, தனக்கு மிகவும் சிறப்பாக பொருந்தக் கூடிய ஜட்டி, பனியன்களை ஆண்கள் தேடிக் கொள்கிறார்கள். ஒரு Perfect Underwear யை தனக்கு மாத்திரம் ஒரு ஆண் தேடிக் கொள்வதில்லை. மாறாக, தனக்கு கிடைத்த திருப்திகரமான தேடலின் முடிவுகளை தனது நண்பர்களுடனும் பகிர்ந்து அவர்களின் தேடலிலும் செல்வாக்குச் ...

டாய்லெட்டின் தாழ்ப்பாள் போடாமல் ஒன்னுக்கு போகும் அண்கள்

ஆண்களுக்கான பப்ளிக் டாய்லெட்டுகளை(Public Toilets/Rest Rooms) பயன்படுத்த உள்ளே நுழையும் போதும், ரயில் பயணங்களில் அவற்றில் உள்ள டாய்லெட்டுகளைப் பயன்படுத்த அவற்றுக்கு அருகில் செல்லும் போதும் சில ஆண்கள் டாய்லெட்டின் கதவை முழுசா மூடாமல், தாழ்பாள் போடாமல், உள்ளே ஆள் இருப்பது தெரியும் வகையில் ஒன்னுக்குப் போவதை நீங்கள் அவதானித்து இருக்கலாம். ஆண்கள் அவ்வாறு கதவை முழுமையாக சாத்தி, தாழ்பாள் போடாமல் ஒன்னுக்குப் போவது ஏன்? அந்த டாய்லெட்டில் அதிக துர்வாடை வீசுவதனாலா? இருக்கலாம். ஆனால் அது மாத்திரம் தான் காரணமா? நிச்சயமாக இருக்காது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?

பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின் போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர்.  அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உறவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து. ஆனால் ஆண்குறியின் அளவு ஆணுக்கு ஏமாற்றத்தை, அவமானத்தை தருவதாய் ஒரு எண்ணம் இருப்பது உண்மைதான். இதனால் தான் பெரிய ஆண்குறியை அடைய என்ன வேண்டும் என்று தேடல் தொடர்கிறது ஆண்களுக்கு... நாட்டில் பெரிய ஆண்குறிகளை உடைய அண்களுக்கு பஞ்சமா? பெரிய ஆண்குறிகளை உடைய ஆண்களை வேண்டி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்களா? இனி இந்த மாதிரி ஏமாற்றம் தேவையில்லை. முறையான உடல் உறவுக்கு ஆண்குறியின் அளவு முக்கியமில்லை. எண்ணமும் செயல் பாடும் தான் முக்கியம். அது சின்னதாய் இருந்தாலும் பெரியதாய் இருந்தாலும் செயல் முறையே பெண்ணுக்கு இன்பம் தரும். ஆண்குறியின் நீளத்திற்கும் பெண்ணை திருப்திப்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூன்றங்குல குறி கூட ஒரு பெண்ணை திருப்பதிப்படுத்திவிடும்.  கா...

பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே - Bare Chest of Men

என்ன தான் ஆண்களின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியை, ஆண்கள் ஆண்மையின் அடையாளமாக பார்த்தாலும், அதனை தேவை ஏற்பட்டல் முழுமையாக மழித்து மொழு மொழுன்னு(Smooth) மாற்றவும் முடியும். காம இச்சையை தூண்டும் விதமான, கவர்ச்சியான ஆண்மை மிக்க ஆண்களின் மேலாடை இன்றிய மேலுடல் அழகை வெளிக்காட்டும் வகையிலான படங்களின் தொகுப்பு.