பிள்ளைகள் அவர்கள் நண்பர்களுடன் எதனையெல்லாம் பேசுகிறார்கள். சமூகவலைத்தளங்களில் சந்திக்கும் அறிமுகமில்லாத நபர்களுடன் எதையெல்லாம் பகிர்கிறார்கள் என்பதை Chat History யைப் பார்த்துக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இரட்டை அர்த்தங்கள் கொண்ட காஜி எழுத்துக்களை, அதிகம் இந்தக் காலத்து இளைஞர்கள், யுவதிகள் பயன்படுத்துகிறார்கள்.
சில Emojis களுக்கு என்ன அர்த்தம் என்பதை புரிந்து கொள்வதற்கும் Strangers களால் உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டிருக்கலாம். ஆகவே பெற்றோர்களே, நீங்கள் Double Meaning Words, Chat Slangs, Code Words, Emojis களை புரிந்து கொள்ள கஷ்டப்பட்டால், அவசியம் ChatGPT/AI யின் உதவியை நாடலாம். அவை எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைத்து, வண்டவாளங்களை தண்டவாளங்களில் ஏற்றி விடும்.
ChatGPT/AI களால் உங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களுடைய நெருங்கிய நண்பர்கள், காதலர்களுக்கும் இடையிலான ரகசிய கலந்துரையாடல்கள், குறியீடு மொழிகளை முழுமையாக அடையாளம் காண முடியாவிட்டாலும், Online இல் சந்திக்கும் Strangers பொதுவாக General Code Words, Emojis போன்றவற்றையே பயன்படுத்துவார்கள் என்பதால், அவற்றை இலகுவாக உங்களுக்கு புரியும் மொழியில் கூறிவிடும்.


Comments
Post a Comment