இதற்கு உளவியலில் அறிவுக்கு கவர்ச்சி என்று பெயர் என படித்தாக ஞாபகம். ஒரு ஆணும் பெண்ணும் ஒரு உறவுக்குள் நுழையும் போது, அந்த ஆண் பெண் இருவருக்கும் சுகபோக சுகம் கிடைக்கும் வரை எந்த சம்பவமும் வெளியில் தெரிவதே இல்லை. யாரோ ஒருவர் ஆசைப்பட்டது முழுவதும் நிறைவு பெறவில்லை என்றால், ஊடகத்தில் ஆண்கள், பெண்கள் என வித்தியாசம் இல்லாமல் கண்ணீர் விடுவது இப்போ ஒரு பழக்கம் ஆகி விட்டது.
அக்டோபர் 2026 இல், "பிக்பாஸ்" புகழ் முத்துக்குமரன் ஒரு பெண்ணை ஏமாற்றியதாக எழுந்த விவகாரத்தில், கவிஞர் தாமரை அவங்களைக் கடுமையாக விமர்சித்து வெளியிட்ட பதிவில் "பேசி மயக்கும் கலை" என அறிமுகம் செய்திருந்தார்.
ஆனால் இது எதுவும் நமக்கு புதிதல்ல. ஏற்கனவே "நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான் மேடம்" என்று சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அதே Concept தான். ஆனால் இங்க Age Category மாத்திரம் வித்தியாசம். அவர் அந்தப் பதிவில் என்ன கூறியுள்ளார், இந்த பேசி மயக்கும் கலை என்றால் என்ன?
இன்ஸ்டாகிராம் பிரமுகரான வஹிதா அக்தர்(Wahidha Akdhar) என்பவர் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாகவும், விவகாரம் தொடர்பாக வீடியோ ஆதாரங்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டது சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாகியுள்ளது. அதிலும் குறிப்பாக முத்துக்குமரன் தன்னை மாதவிடாய்(Periods) காலத்தில் புணர வேண்டும் என்று விரும்பியதை வஹிதா அக்தர் வெளிப்படுத்தியது, முத்துக்குமரனைப் பற்றி பலரையும் கீழ்த்தரமாக சிந்திக்க வைத்தது. இவ்வாறான நபர்களை ஏன் இவர்களால் ஆரம்பத்திலேயே அடையாளம் காண முடியவில்லை?
கவிஞர் தாமரையின் சீற்றம் - "பேசி மயக்கும் கலை"
அடேய் முத்துக்குமரா... இந்தப் பெண் இப்படி அப்பட்டமாய் ஊடகத்தில் போட்டு உடைக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாய் அல்லவா??
இதோ வெளிவந்து விட்டது உன் குட்டு! இது இந்தப் பயல் முத்துக்குமரனைப் பற்றியது மட்டுமல்ல...
பேசி மயக்கும், எழுதி மயக்கும் அனைத்துக் கில்லாடி அயோக்கியர்களுக்குமானதுதான் !. ஆண், பெண் இரண்டு பாலருமே இந்தக் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள்...
நன்றாகப் பேசி, ஊடகங்களில் கொஞ்சம் பெருவலம் அடைந்ததுமே ஆரம்பித்து விடுகிறார்கள்... சொல்லப் போனால் பார்வையெல்லாம் "யாரை வலையில் சிக்க வைப்பது?" என்பதுதான்.
அதற்கு இந்த மயக்கும் பேச்சுக்கலை போல் வேறேதும் உண்டா??
பேசுவது எல்லாம் உலக வீச்சில் இருக்கும், பூமியையே புரட்டிப் போட்டுவிடும் பேச்சு... தன்போன்ற நேர்மையாளன், செயல்வீரன், தியாகி, பசிநோக்கான், கண்துஞ்சான், இலட்சியவாதி எவருமே இல்லை என்று இரையை நம்பவைக்கும் அந்தப் பேச்சும் உடல்மொழியும்... அடடா அடடா....
இரை எத்தனை எச்சரிக்கையாக இருந்தாலும் சிலபேர் அதைத் தாண்டிய விற்பன்னர்களாக இருக்கிறார்கள்...
இவர்களிடம் அடிப்படையில் ஒரு தூண்டில் இருக்கிறது -
ஏதாவது சித்தாந்தம்/கருத்தாக்கத்தில் ஊறித் திளைத்தவர்களாக அல்லது அப்படிக் காட்டிக் கொள்பவர்களாக இருப்பார்கள்...
மதம், சாதி(உயர்/தாழ்வு - இரண்டு வகையுமே ), மொழி, நாட்டுப்பற்று, ஆன்மிகம், பொதுவுடமை, திராவிடம், பெரியாரியம், தமிழ்த்தேசியம், கலை, இலக்கியம், மனிதவுரிமை, பலபாலருரிமை(LGBTQ), விலங்குரிமை - எதுவும் விதிவிலக்கு இல்லை...
இன்னொன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது...
இந்தத் தலைமுறை, அதான் ஜென்சி(GenZ) இளைஞர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்கிறார்கள். எந்த அடிப்படை ஒழுக்கமும் கிடையாது. நாகரிகமும் கிடையாது. அந்தந்த நேரத்தில் கிடைப்பதை அனுபவித்து விட்டுப் போய்விட வேண்டும், அவ்வளவுதான்...
இவர்கள் வாழ்க்கையே அந்த "So What?"(அதுக்கென்ன இப்ப?) என்பதில் அடங்கி விடுகிறது.
காதல் மற்றும் உறவுகள்(Relationships) பற்றிப் பேசும் போது பயன்படுத்தப்படும் இந்த ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் விளக்கங்கள்.
1. Relationship(உறவு): இரண்டு நபர்கள் ஒருவரையொருவர் விரும்பி, புரிந்து கொண்டு, ஒரு முறையான காதலில் இணைந்திருப்பது. இதில் இருவருக்குமே அந்த உறவின் மீது ஒரு பொறுப்பும்(Commitment) நம்பிக்கையும் இருக்கும்.
2. Situationship(சூழ்நிலை உறவு): இது காதலை விடக் குறைவானது, ஆனால் வெறும் நட்பை விட மேலானது. இரண்டு பேருக்கும் இடையே காதல் போன்ற ஒரு பிணைப்பு இருக்கும், ஆனால் "நாங்கள் காதலிக்கிறோம்" என்று அதிகாரப்பூர்வமாகவோ அல்லது ஒரு பொறுப்போடோ(No Label) ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சூழ்நிலைக்கேற்ப நகரும் ஒரு தெளிவற்ற நிலை.
3. One Night Stand(ஒரு இரவு மட்டும்): முன்பின் தெரியாத ஒருவருடனோ அல்லது தெரிந்தவருடனோ, ஒரு இரவுக்கு மட்டும் உடல் ரீதியான தொடர்பில் இருப்பது. இதற்குப் பிறகு அவர்களுக்குள் எந்தவிதமான காதலோ அல்லது தொடர்ச்சியான உறவோ இருக்காது.
4. Live-in(லிவ்-இன்/சேர்ந்து வாழ்தல்): திருமணம் செய்து கொள்ளாமல், ஒரு தம்பதியினரைப் போல ஒரே வீட்டில் தங்கி ஒன்றாக வாழ்வது. ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்ளவும், திருமணத்திற்கு முன்பு தங்களின் பொருத்தம் எப்படி இருக்கிறது என்று பார்க்கவும் இந்த முறையைத் தேர்ந்தெடுப்பார்கள்.
5. Ex(முன்னாள் காதலர்/காதலி): "Ex-boyfriend" அல்லது "Ex-girlfriend" என்பதன் சுருக்கம். கடந்த காலத்தில் உங்களுடன் காதலில் இருந்து, தற்போது பிரிந்துவிட்ட உங்களின் முன்னாள் காதலர் அல்லது காதலியைக் குறிக்கும் சொல்.
6. Crush(ஈர்ப்பு / ஒருதலைக்காதல்): ஒருவரைப் பார்த்த உடனே அல்லது அவரின் குணங்களைப் பார்த்து அவர் மீது ஏற்படும் ஒரு தற்காலிகமான, தீவிரமான ஈர்ப்பு. பெரும்பாலும் இது ஒருதலைக் காதலாகவே இருக்கும்.
7. Ghosting(திடீரென மறைந்துவிடுதல்): ஒருவருடன் பேசிக்கொண்டே இருக்கும்போது, எந்த ஒரு காரணமும் சொல்லாமல், திடீரென்று அவரிடமிருந்து வரும் போன் கால்கள், மெசேஜ்கள் என அனைத்தையும் தவிர்த்துவிட்டு, ஆவி(Ghost) போல முற்றிலும் மறைந்துவிடுவது.
8. Zombieing(மீண்டும் உயிர் பெற்று வருதல்): மேலே சொன்னது போல "Ghosting" செய்துவிட்டு திடீரென காணாமல் போன ஒருவர், பல மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பிறகு, எதுவும் நடக்காதது போல சமூக வலைத்தளங்களில் "Like" செய்தோ அல்லது "Hi" என்று மெசேஜ் அனுப்பியோ மீண்டும் உங்கள் வாழ்க்கைக்குள் வர முயற்சிப்பது(Zombie போல மீண்டும் வருவது).
9. Rizz(கவர்ச்சித் திறன்): இது "Charisma" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. பேச்சுத்திறமை அல்லது உடல் மொழி(Body language) மூலம் ஒருவரை எளிதாகக் கவர்ந்து, தன் வசப்படுத்தும் திறமையைக் குறிக்கும் ஒரு நவீன வார்த்தை.
10. Breadcrumb(ஏமாற்றுப் பேச்சு/அரைகுறை ஆசை காட்டுதல்): ஒருவருடன் முழுமையாகக் காதலில் ஈடுபட விருப்பம் இருக்காது, அதே சமயம் அவரை இழக்கவும் மனமிருக்காது. அதனால் அவ்வப்போது மட்டும் மெசேஜ் செய்து, அவர்களுக்குத் தன் மீது இருக்கும் ஆசையைத் தக்க வைத்துக் கொள்ளும் ஒரு சுயநலமான செயல்(பறவைகளுக்கு ரொட்டித் துண்டுகளைப் போடுவது போல, அரைகுறையாக அன்பு காட்டுவது).
11. Sugar Daddy(பணக்காரப் பாதுகாவலர்): பொதுவாக வயது முதிர்ந்த, வசதியான ஒரு ஆண், தன்னை விட மிகவும் வயது குறைந்த பெண்ணிற்குப் பண உதவி, பரிசுகள் அல்லது சொகுசு வாழ்க்கையை வழங்குவது. பதிலுக்கு அந்தப் பெண் அவருக்குத் துணையாக(Companionship) அல்லது உறவில் இருக்க வேண்டும்.
Relationship, Situationship, One Night Stand, Liv-in, Ex, Crush, Ghosting, Zombieing, Rizz, Breadcrumb, Sugar Daddy என இன்னும் இன்னும் புதிய சொற்கள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன, இவர்கள் அகராதியில்! கணக்கு வைக்க முடியவில்லை.
யார் வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் எத்தனை குறைந்த நேரத்திற்கு வேண்டுமானாலும் இருக்கலாம். தேவையைத் தீர்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம் (நம் காலத்தில் இதற்கு விபச்சாரம் என்று பெயர்)...
Gigolo, Escort எல்லாம் புழக்கத்தில் இருக்கின்றன! திருமணம் என்பது கெட்ட வார்த்தை, குழந்தை பிறப்பு தீண்டாமை. "எந்த ஒழுங்கிற்குள்ளும் வரமுடியாது" என்பதே ஒரே ஒழுங்காக இருக்கிறது. இதனால் விளையும் தீமைகள் பற்றி யோசிக்க அறிவு வேண்டும் அல்லவா ? "தலையி"க்களுக்கு அதுதான் இல்லையே! பிறகு எப்படி வாழ்க்கை நடக்கிறது ??!!.. அதுதான் நாம் இருக்கிறோமே, முந்தையத் தலைமுறை...
நம் பெற்றோர்களையும் அன்பாகப் பார்த்துக் கொண்டு, அடுத்த தலைமுறையின் அட்டகாசங்களுக்கும் இரையாகிக் கொண்டு.... நடுவில் சிக்கி நாசமாகப் போன ஒரு தலைமுறை
நேற்று ஓர் இளம்பெண் குடித்துவிட்டுக் கோயம்பேடு பேருந்தில் நிகழ்த்திய அட்டகாசத்தைப் பார்த்ததில் இருந்து எழுத வேண்டும் என்று நினைத்தேன்... முடியவில்லை.
"மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்"
நிறையப் பேச வேண்டும். ஆனால் எனக்கு அவ்வளவு ஆற்றல் தற்போது இல்லை. அதிர்ச்சிகளைத் தவிர்க்குமாறு மருத்துவர் அறிவுறுத்தல் முத்துக்குமரனைப் பற்றி இந்தப்பெண் தலைஇ துணிச்சலாகச் சொல்லியிருப்பது வியப்பு!
இதற்கு ஒரு குழந்தை வேறு இருக்கிறதாம். இனி சமூகத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?? பொறுத்து இருந்து பார்ப்போம் !.
அடேய் முத்துக்குமரா... வாடா வா... இதற்கு ஒரு விளக்கம் கொடுப்பாய் அல்லவா... அப்போது அந்தத் "தமிழ்நாக்கு" எப்படிச் சுழல்கிறது என்று பார்க்க ஆவலோடு இருக்கிறேன்!
Keywords: பேசியே மயக்கும் வித்தகன் முத்துக்குமரன், Muthukumar, என் தற்கொலைக்கு Biggboss Winner முத்துக்குமரன்தான் காரணம், Muthukumaran Jegatheesan, Bigg Boss Season 8 winner Muthukumaran, கவிஞர் தாமரையின் சீற்றம்

Comments
Post a Comment