Shy Bladder Syndrome(Paruresis) நோயைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மையில், இது ஒரு நோய் அல்ல, மாறாக ஒரு மனநிலைக் கோளாறு. ஆங்கிலத்தில் இதை சமூகப் பதட்டம் மற்றும் அச்சம்(Social Anxiety Phobia) என்று அழைக்கிறார்கள்.
நீங்கள் ஒரு ஆணாக இருந்து, இதுவரை Men Rest Room/Public Toilet இல் காணப்படும் Urinals எனப்படும் இவ்வாறான சிறுநீர் கழிக்கும் கோப்பைகளினுள் சிறுநீர் கழிக்காமல் இருந்திருந்தால், நீங்களும் Shy Bladder எனப்படும் இந்த நிலையால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
Shy Bladder என்பது பொது இடங்களில் அடுத்தவர்கள் பார்க்கும் வகையில், அல்லது இவ்வாறான சிறுநீர் கழிக்கும் கோப்பைகளில் ஏனைய ஆண்களுடன் சிறுநீர் கழிக்க வரிசையில் நிற்கும் போது சிறுநீர் கழிக்க முடியாத சிரமப்படும் நிலையாகும்.
இது சமூகத்தில் அதிகம் பேசப்படும் ஒரு தலைப்பு அல்ல. உண்மையில் இது பயப்பட வேண்டிய ஒன்றல்ல. ஆனால் நீங்கள் இந்த Shy Bladder நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், பல சமயங்களில் நீங்கள் சங்கடப்பட்டிருப்பீர்கள்.
குறிப்பாக, திடீரென்று சிறுநீர் கழிக்க வேண்டும் போல இருந்தால், அவசரமாக முட்டிக் கொண்டு வந்தால், உங்கள் அருகில் உள்ள எந்த(Any Public Rest Room) ஆண்கள் கழிப்பறைக்கும் உங்களால் செல்ல முடியாது. மூத்திரத்தை அடக்கிக் கொண்டு நீண்ட தூரம் பயனித்தாவது அதற்காக, நீங்கள் ஒரு வசதியான கழிப்பறைக்குச் செல்ல வேண்டும்.
அதேபோல், நீங்கள் ஒரு பொதுக் கழிப்பறைக்குச் சென்றாலும், மூடக்கூடிய கதவு கொண்ட ஒரு கழிப்பறை காலியாகும் வரை வரிசையில் காத்திருக்க வேண்டும்.
இந்த விஷயத்தை ஆண்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லையா? நானும் எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு நண்பரும் ஒரு சிறிய பயணமாக வெளியே சென்றிருந்த போது ஏற்பட்ட அனுபவத்தால், இந்தப் பதிவை வெளியிட விரும்பினேன்.
நாங்கள் வெளியே சென்றிருந்த போது, நான் சிறுநீர் கழிக்கவும் முகத்தைக் கழுவவும் கழிவறைக்குச் சென்றேன். அந்த நண்பரும் என்னுடன் வந்தார். நிறுவனத்தின் வாகனம் தயாராக இருந்ததால், நான் விரைவாக சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்து விட்டேன். வெகு நேரமாக நான் வெளியே காத்திருந்தும், அவன் டாய்லெட்டை விட்டு வெளியே வருவதாக தெரியவில்லை. இயலாத கட்டத்தில் நான் மீண்டும் கழிவறைக்குள் சென்றேன்.
அவர் இன்னமும் காத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். ஏன் இவ்வளவு நேரமாகிறது? சீக்கிரம் போயிட்டு வாடா என்று நான் சொன்ன போது தான், அந்த நண்பர் தனது பிரச்சனையைச் சொன்னார்.
அதாவது, கதவை மூடாமல் பொதுக் கழிப்பறைகளில் அவரால் சிறுநீர் கழிக்க முடியாது. மூடக்கூடிய இரண்டு கழிப்பறைகளிலும் தலா இரண்டு பேர் இருந்தனர். பின்னர், ஒன்றில் இருந்த ஒருவர் வெளியே வந்ததும், அந்த நண்பர் விரைவாகச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு, நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
அப்போதுதான், ஆண்கள் பொதுக் கழிப்பறைகளின் Urinals பகுதியில் சிறுநீர் கழிக்காத சில நண்பர்கள் எனக்கும் இருப்பது நினைவுக்கு வந்தது.
நான் கூகிளில் தேடிய போதுதான் அது ஒரு சமூக அச்சம் என்று கண்டுபிடித்தேன். ஒருவேளை நீங்களும் Shy Bladder நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொஞ்சம் அமைதியாகி, சுற்றிலும் பார்க்காமல் அந்த வேலையைச் செய்வதுதான். சிறிது காலத்திற்குப் பிறகு, அந்தப் பழக்கம் தானாகவே போய்விடும்.
பழக்கத்தின்(Habits) காரணமாகப் பொது இடங்களில் சிறுநீர் கழிக்காத ஆண்களும் இருக்கிறார்கள். ஒருவேளை அப்படிச் செய்ய அவர்கள் வெட்கப்படுகிறார்களோ? ஏனென்றால் எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லோருக்கும் ஆண்குறி ஒரே அளவில் ஒரே மாதிரி இருக்காது.
பெரும்பாலான நேரங்களில், உங்கள் ஆணுறுப்பு மற்றவர்களை விடச் சிறியது என்று நீங்கள் நினைத்து, சங்கடமாக உணரும் போது கூட இவ்வாறு தயங்கலாம். இதனால் கூட பெரிய பெரிய ஆண்குறியை உடைய ஆண்கள் தமது சுன்னியை ஒன்னுக்குப் போயிட்டு ஆட்டிக் கொண்டு உங்கள் ஆண்குறியைப் பார்க்கும் போது உங்களுக்கு வந்த முத்திரம் கூட வராமல் போகலாம்.




Comments
Post a Comment