காதலர்களும், கல்யாணம் ஆன தம்பதிகளும் தமது காதலை வெளிப்படுத்த இதயம் போன்ற அமைப்பை கைகளைப் பயன்படுத்தியும், கை விரல்களைப் பயன்படுத்தியும் Heart Shape/Emoji யை உருவாக்கும் கலை காலம் காலமாக இருந்து வந்தாலும்,
ஒரு கையில் விரல்களை வைத்து Heart Shape யை காண்பிக்கும் பழக்கம் அண்மையில் சமூகவலைத்தளங்கள் மூலம் தொற்றிக் கொண்ட ஒன்றாகும். இதனை Korean Finger Heart என்பர்.
Korean Finger Heart(கொரியன் ஃபிங்கர் ஹார்ட்) என்பது கட்டைவிரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்றாகக் குறுக்காக வைத்துச் சிறிய இதய வடிவம்(Mini Heart) அமைக்கும் ஒரு பிரபலமான கைச் சைகை ஆகும். இது "நான் உங்களை நேசிக்கிறேன்" அல்லது "என் அன்பு"(I love you/Affection) என்பதை வெளிப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. கொரியப் பாப் இசைப் பாடகர்கள்(K-pop idols) மற்றும் தொலைக்காட்சி நடிகர்கள் தங்கள் ரசிகர்களிடம் அன்பை வெளிப்படுத்த இந்தச் சைகையைப் பரவலாக்கினர். இரண்டு கைகளையும் சேர்த்துப் பெரிய இதயம்(Big Heart) காட்டுவதற்குப் பதிலாக, ஒரே கையில் விரைவாகச் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழியாகும்.
உங்கள் கட்டைவிரல்(Thumb) மற்றும் ஆள்காட்டி விரல்(Index finger) இரண்டையும் லேசாக வளைத்து ஒன்றின் மேல் ஒன்று குறுக்காக(Cross) வைக்கவும். அந்த இரண்டு விரல்களின் நுனிகள் சந்திக்கும் இடத்தில் ஒரு சிறிய இதய வடிவம் உருவாகும். மற்ற மூன்று விரல்களையும் நேராக அல்லது மடித்து வைத்துக் கொள்ளலாம்.
இருப்பினும் அதில் புதைந்துள்ள உண்மை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள், ஒரு கையின் விரல்களில் Heart Shape யை காண்பிக்கும் போது அந்த முழுக்கையுமே ஒரு இதயம் போன்று வெளித்தெரியுமாம். அதன் காரணமாக மேலே விரல்களில் தெரியும் Heart Shape யை இதயமாக பார்ப்பதை விட, அந்த Finger-Heart Gesture யை காண்பிக்கும் போது அந்த முழுக் கையையும் இதயமாகவே பார்ப்பது நியாயமானது.
ஆண்கள் விரும்பினால் அவர்களின் புஜங்கள், அதாவது மனித உடலின் கையின் மேற்பகுதி, அதாவது தோள் பட்டைக்கும் மணிக்கட்டுக்கும் இடைப்பட்ட(குறிப்பாக தோளிலிருந்து முழங்கை வரை உள்ள) கைப்பகுதியைக் குறிக்கும் Biceps பகுதியை வைத்தும் Heart Shape யை உருவாக்க முடியும்.
மேற்கையை வைத்து இதய வடிவத்தை உருவாக்கும் ஆண்கள்











Comments
Post a Comment