என்ன தான் ஆரம்பத்தில் ஆண்களின் ஜீன்ஸ், பேண்டுகள் பின் பக்கம் ஒரு பாக்கெட்டுடன் மாத்திரம் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படிருந்தாலும், பிற்காலத்தில் அவை இரண்டு பின் பக்க பாக்கெட்டுகளாக மாற்றம் பெற்றமைக்கு பல காரணங்கள் உள்ளன.
முன்பு சந்தையில் இருந்த பேண்ட்களை அணியும் போது, வலது கை வலமுடையைவர்களுக்கு(Right Hand Dominant) வலது பக்க குண்டியின் மீது உள்ள, பின் பக்க பேண்ட் பாக்கெட்டுக்குள் இலகுவாக பர்ஸை வைக்கக் கூடியதாக இருக்கும்.
ஆனால் இடது கை வலமுடையைவர்களுக்கு(Left Hand Dominant) இடது கையாலேயே வலது பக்க குண்டியின் மீது உள்ள பின் பக்க பேண்ட் பாக்கெட்டுக்குள் இலகுவாக பர்ஸை வைக்கக் கூடியதாக இருக்காது. எல்லாவற்றையும் இடது கையால் செய்ய முயல்பவர்களுக்கு இது பிரச்சனையாகவே இருந்து வந்தது.
அளவுக்கு அதிகமாக ஒரு பேண்ட் பாக்கெட்டுக்குள்ளேயே எல்லாவற்றையும் அடசி வைக்கும் போது, பேண்ட் பாக்கெட்டுக்கள் வீங்கி, அசிங்கமாக வெளித்தெரியும். அதே நேரம் உங்கள் தோற்றத்தின் சம நிலை கூட இதனால் குழம்பும்.
இதனை தவிர்ப்பதற்கே பிற்காலத்தில் Side Pockets(Leg Pockets) போலவே Back Pockets களும் இரண்டு கொடுக்கப்பட்டன. இதன் மூலம் இடது கை பழக்கமுடையவர்களாலும் இலகுவாக பர்ஸை பின் பக்க பாக்கெட்டில் வைக்க முடியுமாக இருந்தது. அது மாத்திரமல்லாது ஒரே பாக்கெட்டினுள்ளேயே எல்லாவற்றையும் அடசி வைக்காமல் சமமாக பிரித்து, உங்கள் தோற்றத்தை சமச்சீராக பேணும் வகையில் உங்கள் பொருட்களை பிரித்து எல்லா பாக்கெட்டுகளுக்குள்ளேயும் வைக்கக் கூடியதாக இருந்தது.
தற்போது Cargo Pants களில் Side Pockets, Back Pockets தவிர்ந்து Patch Pockets அறிமுகமாகி உள்ளது. இவை பொருட்களை மேலும் பிரித்து வைக்க உதவியாக பல பாக்கெட்டுக்களை பேண்டில் கொண்டிருக்கிறது.



Comments
Post a Comment